ஏவிஎம் சரவணனின் படம்.. ஆனால் ஏவிஎம் பெயர் இல்லை.. காரணம் என்ன தெரியுமா..?

விஜயகாந்த் நடித்த கம்யூனிஸிய கருத்துக்கள் கொண்ட திரைப்படமான சிவப்பு மல்லி என்ற திரைப்படத்தை ஏவிஎம் சரவணன், சகோதரர் ஏவிஎம் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்தனர். ஆனால் இந்த படம் ஏவிஎம் பெயரில் தயாரிக்கவில்லை. பாலசுப்பிரமணியம் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

இந்த படத்தில் புரட்சிகரமான கம்யூனிச கருத்துக்கள் இருப்பதால் ஏவிஎம் நிறுவனத்திற்கு பிரச்சனைகள் வரலாம் என்ற காரணத்தினால் தான் ஏவிஎம் சரவணன் இந்த படத்தை புதிய கம்பெனியை தொடங்கி அதில் தயாரித்ததாக கூறப்பட்டது.

முதல் படமே காணாமல் போனது.. குணச்சித்திர நடிகர் கே.கே.சௌந்தர் கடந்த பாதை..!

இந்த படம் முழுக்க முழுக்க கம்யூனிஸ கருத்துக்களால் உருவானது. இந்த படத்தில் விஜயகாந்த் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவருமே புரட்சிகரமான கம்யூனிஸ கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.

இந்த படத்தின் நாயகியாக சாந்தி கிருஷ்ணா நடித்திருந்தார். இவர் நேருக்கு நேர் திரைப்படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் நடிகர் ராமராஜன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அருணா நாயகியாக நடித்திருந்தார். அனுராதா, எஸ் எஸ் சந்திரன், சங்கிலி முருகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, குண்டு கல்யாணம் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

சங்கர் கணேஷ் இசையில் உருவான இந்த படத்தை ராமநாராயணன் இயக்கி இருந்தார். இவர் கமர்சியல் படங்களை இயக்கிய நிலையில் இவரா இப்படிப்பட்ட புரட்சிகரமான படத்தை இயக்கியது என்ற ஆச்சரியம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

இந்த படம் தெலுங்கில் வெளியான எர்ரா மல்லேலு என்ற படத்தின் ரீமேக் ஆகும். கடந்த 1981 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி இந்த தெலுங்கு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதலாளிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் இரண்டு கம்யூனிச சித்தாந்த தோழர்கள் பற்றிய இந்த படம் ஆந்திராவில் சக்கை போடு போட்டது. மேலும் இந்த படத்திற்கு ஆந்திர மாநில அரசின் விருதும் கிடைத்தது.

14 வயதில் சினிமாவில் அறிமுகம்.. முதல் படத்தில் வசனமே இல்லை.. நடிகை இளவரசியின் வாழ்க்கைப்பயணம்..!

தொழிலாளர் பிரச்சினை உலகம் முழுவதும் இருப்பதால் இந்த படம் தமிழிலும் வெற்றி பெறும் என்று ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை வாங்கியது. ஏற்கனவே விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் விஜயகாந்த் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும் இந்த படத்திற்கு சரியான ஆள் என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்தனர்.

56 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதன் பிறகு இந்த படம் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியானது. இந்த படத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக சாட்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் கால்ஷீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து இந்த படத்திற்காக நடித்துக் கொடுத்தார். மேலும் இரவுநேர படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டார்

ராமநாராயணன் என்றாலே குறுகிய காலத்தில் படத்தை முடித்து விடுவார் என்ற நிலையில் இந்த படத்தையும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் வகையில் சிறப்பாக முடித்துக் கொடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணியையும் முடித்து ஏவிஎம் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். திட்டமிட்டபடியே ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

சுகந்திர தினத்தில் ஒரு புரட்சிகரமான கம்யூனிச கருத்துக்கள் கொன்ற படத்தை மக்கள் ரசித்துப் பார்த்தனர். இந்த படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் தான் என்றாலும் ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற பாடல் இன்று கூட கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் ஒலிக்கும் என்பது தெரிந்ததே. மேலும் ரெண்டு கண்ணும் சந்தன கிண்ணம் என்ற டூயட் பாடலும் இந்த படத்தில் உண்டு. கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் சுசீலா இந்த பாடலை பாடியிருந்தனர்.

சர்வதேச விருதுக்கு தேர்வு.. 5வது படத்திலேயே சாதனை செய்த விஜயகாந்த்..!

இந்த படத்தை ஊடகங்கள் கொண்டாடியது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews