சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் துப்பாக்கி பட மாஸ் வில்லன்! ஏ. ஆர் முருகதாஸின் அதிரடி!

தளபதி விஜய்க்கு அதிரடியான வெற்றியை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் தான் ஏ.ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படம் விஜய் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் எனும் மூன்று முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக சர்க்கார் திரைப்படம் விமர்சன ரீதியாக சில கருத்துக்களை பெற்றிருந்தாலும் கமர்சியல் ரீதியாக 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த ஹிட் திரைப்படம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து லைக் ஆப் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் வெளியானது.

இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து தளபதியின் 65 ஆவது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு ஏ ஆர் முருகதாஸிற்கு மீண்டும் அமைந்தது. ஆனால் அந்தப் படத்தை தயாரிக்க இருந்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிற்கும் இடையே ஏற்பட்ட சம்பள பிரச்சனையின் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஒரு குரங்கை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அந்தப் படமும் சரியாக அமையவில்லை. இப்படி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில் தற்போது 3 வருடங்கள் கழித்து முருகதாஸின் இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அப்டேட்கள் வெளிவர துவங்கியுள்ளது.

சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் அறிவிப்பு மிக பிரம்மாண்டமாக வெளியானது. இந்த திரைப்படம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிற்கு மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் கம்பேக் திரைப்படமாக அமைய உள்ளது. ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படம் ஆக உருவாக்கும் இந்த திரைப்படம் தளபதி விஜயின் துப்பாக்கி திரைப்படத்தை போல மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைய வேண்டும் என சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தளபதி விஜய்க்கு உருவாக்கிய கதையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

விஜய் ஹீரோ அவதாரம் எடுக்க நடிகர் பிரசாந்த் ஒரு முக்கிய காரணமா?

மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் பல பிரமாண்ட நடிகர்கள் நடிக்க உள்ளனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மோகன்லால் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக மோகன்லால் இணைந்து நடிக்க உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மோகன்லால் இடையேயான காட்சிகள் மிகப் புதுமையாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஹீரோக்களுக்கு இணையாக படங்களில் மாஸ்காட்டி வரும் வில்லன் கதாபாத்திரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்க உள்ளார். தளபதி விஜயின் துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவர் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு இணையாக மிக ஸ்டைலாக வலம் வந்த வித்யூத் ஜம்வால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...