ரஜினி முன்னாடி எப்படி..? இந்த காட்சிக்கு ரொம்ப தயங்கினேன்.. வசந்த் ரவி பகிர்ந்த தகவல்..!!

Vasanth Ravi: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்லர். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்திருப்பார்.

ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகம், சரவணன், சிறுவன் ரித்து உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். உலகம் முழுவதிலும் வெளியான இந்தப் படம் 650 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றி பெற்றது.

கடவுள் தனிபிறவியா படைச்சிட்டாரோ? லட்சங்களில் வந்த சம்பளம்.. ரஜினிக்கு வந்த சந்தேகம்!

அதிலும் ரஜினி படம் என்பதாலேயே ரசிகர்கள் ஜெயிலரை கொண்டாடினர். இந்த படத்தில் ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி காவல்துறை அதிகாரியாக இருப்பார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி குறித்து வசந்த ரவி பகிர்ந்துள்ளார்.

அது பணிக்காக கிளம்பிய வசந்த ரவி அவர்களுக்கு ரஜினிகாந்த் அவர்கள் ஷூ பாலிஷ் போட்டு விடும் காட்சி தான் முதலில் இதுதான் காட்சி என்பது தெரியாத வசந்த ரவி ஷூவை டேபிளில் எடுத்து வைக்க சொன்னவுடன் வைத்துள்ளார்.

செட்டை விட்டு வெளியே போ.. ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்!.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா..?

பின்னர் பார்த்தால் ரஜினி அவர்கள் ஷூ பாலிஷ் பிரஷுடன் எதிரில் அமர்ந்திருந்துள்ளார். இதனால் வசந்த் ரவி சற்று தயங்கியுள்ளார். அப்போது ரஜினி வைங்க என்று கூறியுள்ளார். அதன் பிறகு பாலிஷ் போட்டு பாக்கலாம் என்று ரிகர்சல் போன்று ரஜினி அவர்கள் பார்த்துள்ளார்.

அதன் பிறகு படப்பிடிப்பு எடுத்துள்ளனர். இந்த பேட்டியின் மூலமாக ஒரு மிகப்பெரிய நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் முன்னே ஷூ பாலிஷ் போடுவதற்கு காலை காட்ட மிகவும் தயங்கியதாக வசந்த் ரவி அவர்கள் பகிர்ந்துள்ளார்.

ரஜினிக்கு ஏற்பட்ட ஆசை.. இருந்தாலும் கால்ஷீட் கொடுக்க மனசில்லை.. எந்த படம்னு தெரியுமா

இந்த படத்தில் தனது மகனுக்கு ரஜினி அவர்கள் ஷூ பாலிஷ் போட்டு விட்டதை விட பேரனுக்கு போட்டுவிடும் காட்சி நகைச்சுவையாக அமைந்திருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.