சூப்பர் ஸ்டாருடன் இணையும் சிவகார்த்திகேயன்! தலைவர் 171 படத்தின் வேற லெவல் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் திரைப்படம் தலைவர் 171. நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி தற்பொழுது தலைவர் 170 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடியும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது.

அடுத்தடுத்து 5 வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் தலைவர் 171 படத்தின் பிரீ ப்ரோமோஷன் வேலைகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முழு கதை உருவாக்கத்திற்கு இயக்குனர் லோகேஷ் ஈடுபட்டு வருகிறார். கதை உருவாகும் பட்சத்தில் அதைத் தொடர்ந்து வசனங்கள் எழுதுவதிலும் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நேரத்தில் தலைவர் 171 படத்தில் முன்னணி இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஜெயிலர் திரைப்படத்தின் போது ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின் அந்த படத்தில் வசந்த் ரவி ரஜினிக்கு மகனாகவும் சிறந்த வில்லனாகவும் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருப்பார். அந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரஜினி ரசிகர்களுக்கும், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தெலுங்கு தயாரிப்பாளர்!

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாகி 90 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக மாற்றியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் அடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 21வது திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.