யுவன் இசையில் ஓப்பனிங் பாடலை பாடும் விஜய்! மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகிறது. கோலிவுட் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கிய நிலையில் அண்மையில் சென்னையில் வைத்து முழு ஷூட்டிங் நிறைவு செய்தது படக்குழு.

அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லியோ படப்பிடிப்பு நடக்கும் சமயத்திலேயே வெளியிட்டது. அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக நடிகர் விஜய் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தையும் கிளப்பியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் விஜய் படத்திற்கு யுவன் இசை அமைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை, அது தற்போது தளபதி 68 படம் மூலம் சாத்தியமாகி உள்ளது.

இந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பிரபல நிறுவனம் கைப்பற்றிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சீரிஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு ரூபாய் 26 ஆயிரம் கோடிக்கு தளபதி 68 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளது. இது தமிழ் சினிமாவின் ஒரு புதிய சாதனை என்றும் கூறப்படுகிறது.

விஜய் படத்திற்கு நோ சொல்லி, ரஜினி படத்திற்கு ஓகே சொன்ன உலக அழகி!

லியோ படப்பிடிப்பு முடிந்த கையோடு தளபதி 68 படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாக துவங்கியுள்ளனர். இந்த நிலையில் விரைவில் தளபதி 68 படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில வருடங்களாக விஜய் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தளபதி 68 படத்தில் யுவன் இசையில் அவர் ஒரு பாடலை பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யுவன் இசையில் உருவான புதிய கீதை திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தாலும் அந்த படத்தில் அவர் ஒரு பாடல் கூட படவில்லை. ஆனால் அதே நேரத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான வேலை என்ற படத்தில் யுவன் காம்போவில் காலத்திற்கேற்ற ஒரு கனா என்ற பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதும், அந்த பாடலை விஜய்யுடன் நடிகர் நாசர் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...