சாமானியனுக்கும் சினிமா ஆசையைத் தூண்டிய கலைஞன் சிவாஜி கணேசன்! அவருக்கும் எட்டாமல் போன கதாபாத்திரம் ?

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திரைக்கதையில் கணேசன் ’பராசக்தி’யில் நடிக்க ஆரம்பித்தார். அவரது படங்கள் திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றியது . அனைத்து தரப்பிலும் ஆதரவு பெற்ற நடிகராக இருந்தார்.

நவராத்திரி படம் வெளியான ஆண்டில் தீபாவளி பரிசுப் போட்டிக்காக பத்திரிக்கைகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தபாலில் பதில் அனுப்பி பரிசுகளை வென்ற ரசிகர்கள் பலர். நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களை கட்டி போட்டிருந்தவர் நடிகர் திலகம்.

அவர் பிசியான ஹூரோவாக இருந்த காலத்தில், அமெரிக்காவிற்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் அவர் பலே பாண்டியா படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். பயணப்படும் முன் படத்தினை முடித்து கொடுக்க வேண்டி இருந்ததால், 11 நாட்களில் ஸ்டியோவிலேயே தங்கி நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பலர் அவரது நடிப்பினை ஓவர் ஆக்டிங் செய்கிறார் என விமர்சனம் செய்தனர். அப்படி நடிப்பதே தனக்கு பிடித்திருக்கிறது என தன்னுடைய சுயசரிதையில் அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். பின் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்த சின்ன மருமகள், தாவணி கனவுகள், முதல் மரியாதை, ஒன்ஸ்மோர், படையப்பா போன்ற படங்கள் மக்களை அவருக்கு மிக நெருக்கமானவராகவும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகவும் நினைக்க வைத்தது.

IMG 20231002 WA0011

இப்படிப்பட்ட நடிப்பின் இலக்கணம் கணேசன் அவர்களுக்கு சிவாஜி என்ற பெயரும் சினிமா வாய்ப்பும் கிடைக்க காரணமாக இருந்தவர்கள் இருவர். கணேசன் என்ற பெயரை மாற்ற வேண்டிய நிலை வந்தபோது அதை சிவாஜி கணேசன் என மாற்றியவர் பெரியார். அந்த பெயரை வைக்க காரணம் அப்போது அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில் கணேசன் நடித்து வந்ததால் அந்தப் பெயரையே சிவாஜி கணேசன் என மாற்றினார்.

அதுவே காலத்திற்கும் நிலைத்தது. பின் ‘பராசக்தி’ படத்தை தயாரித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது படத்திற்கு கணேசன் வேண்டாமென மறுத்தபோது, அந்த வாய்ப்பினை உறுதி செய்து கொடுத்தவர் அண்ணா. இந்த இருவரில் சிவாஜி கணேசன் நடிக்க வேண்டுமென ஆசை பட்டது தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது சிவாஜி கணேசனுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews