ஆசியாவின் காஸ்ட்லி நகர் மும்பை தான்.. வீட்டு வாடகை மட்டும் ரூ.1.5 லட்சம்..!

ஆசியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான பகுதி சிங்கப்பூர் மற்றும் மும்பை என சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் சராசரியாக மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான வீட்டின் வாடகை சுமார் ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான அர்பன் லேண்ட் இன்ஸ்டிட்யூட் புதி அறிக்கையில், சிங்கப்பூர் மற்றும் மும்பை ஆகியவை முறையே ஆசியா மற்றும் இந்தியாவிலேயே வீடு வாடகைக்கு அல்லது விலைக்கு வாங்குவதற்கு அதிக விலை கொண்ட நகரங்கள் என்று கண்டறிந்துள்ளது.

இம்மாதம் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஒரு தனியார் வீட்டின் சராசரி விலை ரூ. 9.87 கோடி என்று இருப்பதாகவும், இது 2021ஆம் ஆண்டில் ரூ. 9.65 கோடி ஆக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே அறிக்கையில் சிங்கப்பூரில் வீட்டு வஃஅடகை மிக அதிகமாக இருப்பதாகவும், மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான சராசரி வாடகை மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்தியாவில், வீடு வாடகைக்கு அல்லது வாங்குவதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக மும்பை என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு வீட்டின் சராசரி விலை ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 2.78 லட்சம் ஆகும். இது 2021ஆம் ஆண்டில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 2.62 லட்சம் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே மும்பையில்தான் வாடகை அதிகம் என்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான சராசரி வாடகை மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூர் மற்றும் மும்பையில் வீடுகளை வாங்கவோ அல்லது வாடகைக்கு வாங்கவோ மக்கள் சிரமப்படுவதையும், வீட்டுவசதிக்கான அதிக விலையும் சிக்கலாக்குகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும்.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலுள்ள அரசாங்கங்கள் வீட்டுவசதியை மலிவு விலையில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews