சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது- டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவரா சிம்பு

நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது வரும் 11ம் தேதி சிம்புவுக்கு டாக்டர்  பட்டம் வழங்கப்படுகிறது.

தற்போது வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு நடித்துள்ளார் இந்த நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதால் பலர் கோபமடைந்து உள்ளனர் சிம்புவுக்கு டாக்டர்  பட்டம் தேவையா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த கால தவறுகளின் அடிப்படையில் சிம்பு மீது தவறான குற்றச்சாட்டை மட்டும் மனதில் வைத்து சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது தவறானது என வாதிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் அதுவல்ல சிம்பு சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். உறவைக்காத்த கிளி படத்தில் 6 மாத குழந்தையாக நடிக்க தொடங்கியதில்  இருந்து சிறுவயதில் இருந்தே ஆடல், பாடல், டான்ஸ், நடிப்பு எல்லாவற்றையும் சிறப்பாக கற்றுக்கொண்டு எல்லாவற்றையும் சிறப்பாக செய்தவர். குழந்தை நட்சத்திரத்திலேயே தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இதனால் இந்த டாக்டர் பட்டத்தை பெற சிம்பு முழு தகுதியானவர்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews