சிவாஜி வேண்டாம் என வெறுத்த சூப்பர் ஹிட் பாடல்! எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் காலத்தால் அழியாத சான்றாக மாறி உள்ளது. சிவாஜி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் தனி கதையம்சம் கொண்டதாகவும் ரசிகர்களை ஈர்க்கும் விதத்திலும் அமைந்திருக்கும். நடிப்பின் ஜாம்பவான் ஆகிய சிவாஜி தான் நடிக்கும் ஒரு படத்தில் இந்த பாடல் வேண்டாம் என முதலில் முடிவெடுத்துள்ளார். ஆனால் அந்தப் பாடல் பின்பு படமாக்கப்பட்டு சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்து படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. அந்த பாடல் என்ன பாடல் அது எந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 1970 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சொர்க்கம். இந்த படத்தில் சிவாஜியுடன் இணைந்து கே பாலாஜி, கே ஆர் விஜயா, ராஜஸ்ரீ, முத்துராமன், ஆர் எஸ் மனோகர், சச்சு, எம் ஆர் ஆர் வாசு மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மையக்கதை படத்தில் கல்லூரி படிப்பை முடிக்கும் சங்கர் தன் வாழ்க்கையில் பணம் தான் முக்கியம் என நினைத்து வாழ்ந்து வருகிறார். அதன்பின் ஒருவரின் உதவியோடு அவர் வாழ்க்கையில் பணமும், செல்வாக்கும் அடுத்தடுத்து குவிய தொடங்குகிறது. அதன் பின் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார் சங்கர். அந்த நேரத்தில் வில்லனின் சதி வேலைகளில் பலியாகும் சங்கர் தவறான விஷயங்களுக்கு நாம் துணை சென்றது தான் இதற்கு காரணம் என்பதை உணர்ந்து கொள்கிறார்.

அதிலிருந்து எப்படி மீண்டு நல்ல மனிதராக மாறுகிறார் என்பது தான் கதை. இதில் சங்கர் கதாபாத்திரத்தில் சிவாஜி மிக சிறப்பாக நடித்திருப்பார். அதேபோல் நடிகை கே ஆர் விஜயாவும் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருப்பார். இந்த படத்தின் மிகச் சிறப்பான கதையை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி. மேலும் இவர் தான் இந்த படத்திற்கு முழு வசனமும் எழுதி இருப்பார். இந்தப் படத்திலும் சிவாஜியின் மற்ற படங்களைப் போலவே பல பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள், ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன், சொல்லாதே யாரும் கேட்டால், அழகு முகம் என பல பாடல்கள் இந்த படத்தில் இருந்த போதும் பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால் பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்து படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தது. இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க இந்த பாடலை ஆலங்குடி சோனு எழுதிய இந்த பாடல் வேற லெவலில் ஹிட் கொடுத்திருந்தது.

இந்த பாடலில் சிவாஜியுடன் விஜயலலிதா இணைந்து நடனமாடி இருப்பார், இருவரின் நடனமும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அந்த காலத்தில் இந்த பாடல் பல தியேட்டர்களில் படம் முடிந்த பின்பும் மீண்டும் ஒருமுறை இந்த பாடல் திரையிடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இந்த பாடலுக்கு மட்டும் என தனி ரசிகர் கூட்டம் இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை ரீமேக் செய்யப்பட்டு தளபதி விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த அளவிற்கு இந்தப் பாடல் எப்பொழுது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கும்.

செத்தாலும் நான்தாண்டா பாப்கிங் : அடேங்கப்பா மைக்கேல் ஜாக்சன் ஜாக்கெட் இவ்வளவு கோடிக்கு ஏலமா?

இத்தகைய சிறப்பு மிக்க பொன்மகள் வந்தாள் பாடலின் ட்யூனை முதலில் சிவாஜி அவர்கள் கேட்டு இந்த பாடல் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் பொழுது ஏதோ திருக்குறள் மாதிரி இருப்பதால் வேண்டாம் என இயக்குனரிடம் கூறி மறுத்துள்ளார். ஆனால் இயக்குனரும் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களும் இணைந்து இந்த பாடல் நன்றாக இருக்கும் என விளக்கியுள்ளனர். மேலும் இவர்கள் சிவாஜி இடம் இந்த இந்த பாடலை முழுவதுமாக போட்டு காட்டாமல் வெறும் ட்யூனை மட்டும் காண்பித்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்.

அதன்பின் ஆலங்குடி சோமு, இந்த பாடலின் முதல் வரியான பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால் என எழுதிக் கொடுத்ததும் 20 நிமிடத்தில் இந்த முழு பாடலுக்கான டியூன் இசையமைக்கப்பட்டது. அதன் பின் சிவாஜி அவர்களுக்கு இந்த பாடல் பிடித்துப் போக படத்தில் இடம்பெற்றது. அதைப்போல் இந்த பாடல் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...