படையப்பா படம்.. சிவாஜி போட்ட கண்டிஷன்.. கடைசி படமாக அமைந்த சோகம்..!!

நடிகர் திலகம், சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாகும். சிவாஜி கணேசன் அவர்கள் ரஜினியின் அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோன்று இதுவே சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த கடைசி படமாகும். 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சிவாஜி வேண்டாம் என வெறுத்த சூப்பர் ஹிட் பாடல்! எந்த படத்தில் தெரியுமா?

Padayappa1999

கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவர்களை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் அவர்கள் சென்று பேசியுள்ளார். அப்போது 71 வயது எட்டி இருந்த சிவாஜி கணேசன் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

அவர் கூறியதாவது “நம்மள ஒழுங்கா பார்த்துக்கணும். என் வயசு தெரியுமில்ல, எனக்கு என்ன எல்லாம் பிராப்ளம் என்று தெரியுமில்ல?” என்று கேட்டுள்ளார். அதற்கு கே எஸ் ரவிக்குமார் நிச்சயமாக நல்லபடியாக பார்த்துக் கொள்வோம் என உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

சிவாஜி கண்ணீர் மல்க ரஜினிக்கு எழுதிய கடிதம்!.. அது என்ன தெரியுமா..?

இந்த படத்தில் ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சி என்றால் அது சொத்து முழுவதையும் தனது வளர்ப்பு தம்பிக்கு கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் சிவாஜி கணேசன் வீட்டு வாசலில் இருந்த தூணில் அமர்ந்தபடி உயிரிழந்தது தான்.

FoCei6ZagAAgL1K

இந்த படம் முடிந்து 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி சிவாஜி கணேசன் உயிரிழந்த நிலையில் அந்த ஒரு காட்சி ரசிகர்களை பெரிதும் கலங்கச் செய்தது. இந்தப் படத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து சிறந்த படத்திற்கான விருது உட்பட ஐந்து விருதுகள் கிடைத்தது.

சிவாஜி படத்தில் அதிரடி செய்த ரஜினி!.. கடுப்பாகிய படக்குழு!.. பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட நடிகர் திலகம்!

மேலும் அப்போதைய சூழலில் உலகம் முழுவதிலும் வெளியான முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையும் படையப்பா படத்திற்கு உண்டு. 50 கோடி வசூல் செய்த படையப்பா இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக தான் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews