மீண்டும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் விஜய்! தளபதி 69 திரைப்படத்தின் தெறிக்கவிடும் அப்டேட்!

கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் நடிக்கும் பொழுதே தளபதி விஜய் அடுத்ததாக தனது 67வது திரைப்படத்தின் இயக்குனரை தேர்ந்தெடுத்தார். அந்த வகையில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்பொழுது தனது 68வது திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்து, சவுத் ஆப்பிரிக்கா, ஹைதராபாத் என பல நகரங்களில் நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துருக்கியில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்திரி, யோகி பாபு, பிரேம்ஜி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஆக்சன் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் இந்த திரைப்படம் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக தளபதி விஜய் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி விடுவார். அடுத்த படத்திற்கான கதை கேட்பது அல்லது இயக்குனர்களை தேர்ந்தெடுப்பது என்பது விஜயின் வழக்கமான ஒன்று. ஆனால் தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தளபதி 69 திரைப்படத்தின் இயக்குனர் யார் என்பது இன்றுவரை உறுதியாக தெரியவில்லை. இயக்குனர் அட்லி அல்லது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தளபதி 69 திரைப்படத்தை இயக்குவதாக பல தகவல்கள் வெளியாக இருந்தாலும் உறுதியான தகவல் இன்று வரை வெளியாகவில்லை. இயக்குனர் அட்லி தளபதி மற்றும் ஷாருக்கான் வைத்து ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மிகப்பெரிய திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?

இந்த நிலையில் தளபதி 69 ஆவது திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் தளபதி 69 ஆவது படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த அதிர்ச்சிகரமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் அடுத்த திரைப்படத்தை தெலுங்கில் RRR திரைப்படத்தை தயாரித்த டி வி வி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் உறுதியான தகவல் வெளியாகி வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் தளபதி விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், விஜய்க்கு மிகப்பெரிய சம்பளத்தை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் என்பதால் தளபதி 69ஆவது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் தான் இயக்குவார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் RRR திரைப்படத்தை இயக்கிய ராஜமவுலி தளபதி விஜயை இயக்க அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.