கணவர் அஜித்திற்காக ஷாலினி உருவாக்கிய பிரத்யேக Shirt.. இந்த பாட்டுல கவனிச்சுருக்கீங்களா?

இந்திய சினிமாவில் ஏராளமான திரை பிரபலங்கள் தங்கள் துறை சார்ந்தவர்களையே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில், ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் – அலியா பட், ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே என அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ் சினிமாவில் கூட இது போல ஏராளமான ஜோடிகள் உள்ளனர். சுந்தர் சி – குஷ்பு, சூர்யா – ஜோதிகா, ஆர்.கே. செல்வமணி – ரோஜா என பலரும் திரைப்படங்களின் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அந்த வகையில், பலரின் பேவரைட்டாக உள்ள கோலிவுட் ஜோடி என்றால் அது அஜித் குமார் – ஷாலினி தான்.

அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் சரண் இயக்கத்தில் உருவான அமர்க்களம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே காதல் உருவாக, 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணமும் செய்து கொண்டனர். 23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை கடந்து அஜித் – ஷாலினி தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சூழலில் அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
ajith shalini

முன்னதாக, ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை, துணிவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். திரைப்படங்களில் நடிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் பைக் பயணம் மேற்கொள்வதையும் அஜித் குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனிடையே, அஜித் குமார் திரைப்படம் ஒன்றில் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த தகவல், தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. N. மகாராஜன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த திரைப்படம் ஆஞ்சநேயா. இதில் அவருடன் மீரா ஜாஸ்மின், ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் தான் ஷாலினி காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்திருந்தார். ஆஞ்சநேயா படத்தில் வரும் பாவாடை பஞ்சவர்ணம் என்ற பாடலில், அஜித் அணிந்திருந்த சட்டையை ஷாலினி தான் வடிவமைத்திருப்பார். மேலும், அந்த சட்டையின் சிறப்பம்சமாக AK என அஜித்தை குறிப்பிடும் வகையில் வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தது.
ajith anjaneya

அஜித் குமாரின் ரசிகர்கள் பலரும் அவரை AK என குறிப்பிடும் சூழலில், அவரது மனைவி ஷாலினிக்கும் தனது கணவரை AK என குறிப்பிடுவது தான் பிரியமாம். அதற்காக தான் அவர் வடிவமைத்த ஆடையில் AK என்ற வார்த்தையை இடம்பெற வைத்தார் என்பது கூடுதல் தகவல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.