செம்பி படத்தில் இயேசு வசனம்.. பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட பிரபு சாலமன்

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான செம்பி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்ற நிலையில் பத்திரிகையாளர் ஒருவருக்கும் இயக்குனர் பிரபு சாலமனுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபுசாலமன் இயக்கத்தில் கோவைசரளா அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள செம்பி படத்தில் ‘உன்னிடத்தில் செலுத்தும் அன்பை நீ பிறரிடத்தில் செலுத்து’ என்ற இயேசு வசனம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இந்த படம் ‘கிறிஸ்து மதத்தை பரப்பும் படமா?’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது பிரபுசாலமன் ’அது என் நம்பிக்கை என்றும் நான் பின்பற்றுவது’ என்றும் கூறினார். இதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ‘இதுபோன்ற வசனம் பகவத் கீதையிலும் உள்ளது என்று செய்தியாளர் கூற அதற்கு பதிலளித்த பிரபுசாலமன் பகவத் கீதையை படித்தவர்கள் அவ்வாறு கூறினால் நான் எதுவும் சொல்லப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு அந்த வசனம் உங்கள் மனம் புண்படும் வகையில் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் என பிரபு சாலமன் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. ஒரு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் திடீரென கிறிஸ்துவ மதத்தை பரப்புவது குறித்த வசனம் என்று கேள்வி எழுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...