இப்படியெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்…! ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த சல்மான்கான்

பொங்கல், தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டத்துடன் புது படங்களின் வருகையும் முக்கியமான ஒன்று. தங்களது அபிமான நட்சத்திரங்களின் படங்கள் பண்டிகை நாட்களில் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர். தங்களது அபிமான நட்சத்திரத்தை கொண்டாடுகிறேன் என்ற பேர்வழியில் சில மடத்தனமான செயல்களையும் செய்து பொதுமக்களையும் இடையூறுக்கு உள்ளாக்குகின்றனர்.

பிரம்மாண்ட பேனர்கள் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது, பீர் அபிஷேகம் செய்வது, சூடம் ஏற்றி ஆராதனை காட்டுவது பதாகைகளை ஏந்தி நடுரோட்டில் வாகனங்களில் எறி இடையூறு விளைவிப்பது போன்ற கிறுக்குத் தனமான செயல்களையும் செய்து வருகின்றனர். நட்சத்திரங்கள் எவ்வளவோ கூறியும் அவர்கள் திருந்துவதாக இல்லை.

கடந்த பொங்கலன்று அஜீத்தின் துணிவு படம் வெளியான போது ரசிகர் ஒருவர் இதேபோல் ஓடும் லாரியில் ஏறி ஆட திடீரென நிலைதடுமாறி விழுந்து பலியான சோகம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் லியோ திரைப்பட டிரைலரை சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் ஒளிபரப்பும் போது திரையரங்கையே சின்னபின்னமாக்கினர் ரசிகர்கள்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்நிலை என்றால் பாலிவுட்டில் இதைவிட ஒருபடி மேலே போய் திரையரங்கில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களை பீதியடைச் செய்துள்ளனர் ரசிகர்கள். நடிகர் சல்மான்கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்திப் படம் டைகர் 3.  பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தை மணீஷ் சர்மா இயக்கியுள்ளார். ஸ்பை திரில்லர் கதையம்சமாக உருவாகியுள்ள இப்படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியானது.

உண்மையில் அந்தப் படத்திற்கு தான் கஷ்டப்பட்டு உழைத்தோம்!‌.‌. மனக்குமுறலில் மணிரத்னம்!..

படத்தின் முதல்நாள் காட்சியின் போது இரசிகர்கள் சிலர் உற்சாக மிகுதியில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வீடியோவாக வலம்வந்து அதிர்ச்சியடைச் செய்தது.

Salman

இதுகுறித்து நடிகர் சல்மான் ரசிகர்களுக்கு ஓர் அன்புக் கட்டளை இட்டுள்ளார். இரசிகர்கள் மிக ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறீர்கள். நமக்கும், மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் படத்தைப் பாருங்கள். திரையரங்கின் உள்ளே பட்டாசு வெடிப்பது மிக ஆபத்தான செயல். இனிமேல் இவ்வாறு செய்ய வேண்டாம். ஆபத்து ஏற்படா வகையில் திரைப்படத்தை இரசியுங்கள் என்று x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.