உண்மையில் அந்தப் படத்திற்கு தான் கஷ்டப்பட்டு உழைத்தோம்!‌.‌. மனக்குமுறலில் மணிரத்னம்!..

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இன்றளவும் இவர் படங்களில் நடிக்க விரும்பாத நடிகர்களே தமிழ் சினிமாவில் கிடையாது. எப்படியாவது இவரின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கும்.

அப்படி தனக்கென தனி ஒரு பாணியை வளர்த்து கொண்டவர் மணிரத்தினம். இதற்கு உதாரணமாக பல சூப்பர் ஸ்டார்கள் எம்.ஜி.ஆர் முதல் ரஜினி கமல் வரை எடுக்க நினைத்த கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றி அமைத்தவர்.

தற்ப்போது நீண்ட வருடங்கள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு ”தக் லைஃப்” என பெயரிடப்பட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் அறிமுக வீடியோவில் கமல் தன்னுடைய பெயரை சக்திவேல் நாயக்கர் என்று சொல்லுவார்.

படத்தின் பெயர் தக் லைப் என்று வைத்தாலும் நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்துள்ள கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இருக்குமா..? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளனர்.

நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் கலட் மூவி. இன்று அந்த படத்தை எல்லோரும் கொண்டாடினாலும் அன்றைய காலகட்டத்தில் இந்தப் படத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று மனக்குமுறியுள்ளார் மணிரத்னம். நாயகன் வெளிவந்த அதே தேதியில் தான் ரஜினி நடித்த மனிதன் திரைப்படம் வெளியானது.

அக்காலகட்டத்தில் மசாலா திரைப்படங்களை மட்டுமே மக்கள் ஆதரித்தனர். அத்தகைய படங்களால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மனிதன் திரைப்படம் குடும்ப மக்களுக்கு ஏற்றால் போல் இருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த திரைப்படத்திற்கு செல்லத் தொடங்கி விட்டனர்.

இதனால் நாயகன் திரைப்படத்திற்கு அன்றைய காலகட்டத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்று மணிரத்தினம் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அக்னி சிறகுகள் படத்திற்காக பல விருதுகளை வாங்கி குவித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் ”அக்னி சிறகுகள் படத்தை விட அதிக உழைப்பை நாயகன் திரைப்படத்திற்காக போட்டோம். ஆனால் அப்படத்திற்கு அந்த காலகட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு கொண்டாடவில்லை.

பின்னர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பத்திரிகைகளில் பாசிட்டிவாக விமர்சனங்கள் எழுதிய பின்னரே இந்தப் படத்தை பிரபலம் அடைய செய்தார்கள். அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் கல்ட் மூவியாக நாயகன் கொண்டாடப்பட்டது. இவ்வாறு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...