Sakthivel: உண்மையை சொல்ல துடிக்கும் சக்தி… சந்தோஷத்தில் மெய்யநாதன் குடும்பம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் வேலன் சக்தியை ஹாஸ்பிடல் கூட்டிச் செல்வதாக கூறிச் செல்கிறான். சக்தி நீ பண்றது பெரிய தப்பு வேலா என்று சொல்கிறாள். பின்னர் இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். சக்தி கர்ப்பமாக தான் இருக்கிறாள் டாக்டர் சொல்லிட்டாங்கனு சொல்கிறான். சக்தி அதிர்ச்சியடைகிறாள். சிக்கல் சிவபதி சந்தோசப்படுகிறார். மறுபுறம் வேலை விஷயமாக வெளியூர் சென்ற சேரன் திரும்பி வருகிறான். வந்ததும் பாட்டி உடம்பு சரியில்லாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு மீனாளை திட்டுகிறான். பாட்டி மீனாளை திட்டாதே அவள் ஒன்றும் செய்யவில்லை எனக்கு வயசாகிடுச்சு அதுனால தான் உடம்பு சரியில்லை என்று கூறி மீனாளை காப்பாத்துகிறார். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் இனி என்ன நடக்கிறது என்பதைக் காணலாம். சக்தி கர்ப்பமாக இருக்கிறாள் குழந்தை நல்லா இருக்குனு டாக்டர் சொல்லிட்டாங்கனு வேலன் சொல்லுகிறான். ஜோதி அதை நம்பாமல் டாக்டர் சீட்டைக் கேட்கிறாள். சிக்கல் சிவபதி ஜோதியை ஏன் இப்படி சந்தேகப்படுற அப்டினு திட்டுகிறார். பின்னர் வேலுவிடம் நீ வசூலுக்கு போகவேணாம் சக்தியை பாத்துகிறது தான் உன் முழுநேர வேலை என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

பின்னர் சக்தி வேலுவிடம், நீ என்ன நினைச்சிட்டு இப்படி பண்ணிட்டு இருக்கேனு தெரியல, குழந்தை விஷயத்துல விளையாடுறியே இது மகா பாவம், நீ இப்படி பண்றதுனால எனக்கு தான் அவமானம் எல்லாம் மிஞ்சும். நான் கர்ப்பம் இல்லை அப்படிங்கிற உண்மையை சொல்ல தான் போறேன்னு சொல்கிறாள். அதற்கு வேலன் உனக்கு இந்த மரியாதை கிடைக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு, அதோட அப்பா சந்தோசத்தை நான் கெடுக்க விரும்பல. நாம சொன்ன பொய் உண்மையா ஆகிடணும்னு நினைக்கிறேன் அப்டினு சொல்லி சமாதானபடுத்துகிறான்.

அதற்கு சக்தி நீ அன்பு காட்டுறேன்னு பண்ற விஷயங்கள் எல்லாம் ஏன் மூச்சை நெறிக்குது. நமக்குள்ள ஒன்னும் நடக்கல அத என்னால வெளிப்படையா சொல்ல முடியலைன்னுதானே அதை வச்சு நீ என்னை ப்ளாக்மெயில் பண்ற என்று கேட்கிறாள். பதிலுக்கு வேலன் நீ வேற நான் வேற இல்லை சக்தி நீதான் பிரிச்சு பாக்குற என் அளவில்லாத அன்பை புரிஞ்சுக்க மாட்டிங்குற பரவால்ல உனக்காக நான் அப்பாவிடம் பேசுறேன்னு சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

அடுத்ததாக, சேரன் மீனாளை சமாதானபடுத்துவதற்காக வளையல்கள் மற்றும் சுடிதாரை கொடுக்கிறான். அதைப் பார்த்த மீனாள் இது எல்லாமே செல்வி சைஸ்க்கு தான் இருக்கு. அவளுக்காக நீங்க வாங்கினது எனக்கு வேண்டாம், நீங்க என்னை சமாதானம் படுத்தணும்னு நெனைச்சதே போதும். எனக்காக நீங்க என்னிக்கு வாங்கிட்டு வர்றிங்களோ அப்போ நான் வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிடுகிறாள்.

பின்னர் சிக்கல் சிவபதி மெய்யநாதனுக்கு போன் செய்து உங்க பொண்ணு சக்தி முழுகாம இருக்கானு சொலிகிறார். அதைக் கேட்ட மெய்யநாதன் சந்தோசப்பட்டு அந்த விஷயத்தை குடும்பத்துடன் பகிர்ந்துகொள்கிறார். அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அங்கிருந்த மீனாள் உடனே தனது அம்மா ஜோதிக்கு போன் செய்து சக்தி உண்மையிலேயே வாயும் வயிறுமா இருக்காங்களான்னு கேட்கிறாள். ஜோதியும் அப்படிதான் சொல்லிட்டு திரியுறானு சொல்கிறாள். அதற்கு மீனாள் ஹனிமூன் போனப்போ கூட அண்ணனும் சக்தியும் சண்டை போட்டுட்டு தான் இருந்தாங்க. சக்திக்கு அண்ணனை பிடிக்கவே பிடிக்காது. அவங்களுக்குள்ள எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை, நல்லா விசாரிங்க அம்மா என்று கூறுகிறாள். அதற்கு ஜோதி, அதற்கு நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன், அவளை சும்மா விடமாட்டேன் என்று சொல்கிறாள். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண விஜய் டிவி தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...