தேனுவை காப்பாற்ற போராடும் சக்தி… விறுவிறுப்பான சக்திவேல் தொடரின் இன்றைய எபிசோட்…

விஜய் டிவியில் விறுவிறுப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் சக்திவேல். நேற்றைய எபிசோடில் வேலுவும் சக்தியும் ஹனிமூன்க்காக சென்றிருந்த பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பி வருகின்றனர். வரும்போதே சண்டையிடும் சக்தியிடம் தன்னை புரிந்து கொள்ளுமாறு சக்திவேல் கெஞ்சுகிறான். இப்படியே வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் தென்னரசு தேனுவிடம் கற்பத்தை கலைக்க வேண்டும். உன்மூலமாக நான் எனது வாரிசை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று கூறுகிறான். அப்பா அம்மாவிற்காக தான் உன்னை இந்த வீட்டில் விட்டு வைத்திருக்கிறேன், நீ இப்போது கர்ப்பதைக் கலைக்க ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உன் வயிற்றில் வளர்வது என் குழந்தை இல்லை என்று அனைவரிடமும் கூறி விடுவேன் என்று மிரட்டுகிறான். தேனுவும் கர்ப்பத்தை கலைக்க வேண்டாம் என்று கெஞ்சி கொண்டு இருக்கிறாள். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்திருந்தது.

அதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று இனி காணலாம். வேலுவும் சக்தியும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். அவர்களை ஜோதி அடுத்ததாக சீக்கிரம் வளைகாப்பு நடக்க வேண்டும் என்று கூறி ஆரத்தி எடுக்கிறாள். அந்த நேரம் தென்னரசு தேனுவை இழுத்து கொண்டு வருகிறான். அப்போது சிவபதி எங்கே இருவரும் போகிறீர்கள் என்று கேட்கிறார்.

அதற்கு தென்னரசு நாங்கள் படம் பார்க்க செல்கிறோம் என்று சமாளிக்கிறான். சக்திக்கு சந்தேகம் வந்து தேனுவிடம் ஏன் அக்கா ஒரு மாதிரி இருக்கீங்க என்று கேட்கிறாள். அதற்கு தென்னரசு சக்தியை திட்டிவிட்டு அங்கிருந்து தேனுவை கூட்டிச் செல்கிறான். பின்பு வேலு சக்தியிடம் என்னை புரிந்து கொள்ள மாட்டாயா சக்தி, கொஞ்சம் மூளையை கழட்டி வைத்து விட்டு மனதார யோசித்து பார் என்று கூறுகிறான். அதற்கு சக்தி என்னை விருப்பம் இல்லாமல் தாலி கட்டியது நீ. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அதைத்தான் இப்பொது நீ அனுபவிச்சிட்டு இருக்க, ஒருநாளும் உன்னுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று கூறுகிறாள். அதற்கு வேலு சக்தி நீ என்னையே சுற்றி வரும் நாள் சீக்கிரம் வரும் என்று கூறிவிட்டு சென்று விடுகிறான்.

சிறிது நேரத்தில் சக்திக்கு தேனுவிற்கு எதோ தவறு நடப்பது போல் தோன்றுகிறது. பின்னர் வேலுவிடம், தேனு அக்கா முகமே சரியில்லை, உங்க அண்ணன் தேனு அக்காவை படம் பார்க்க கூட்டிச் செல்லும் ஆள் ஒன்றும் இல்லை. அவர் சொன்ன படம் எந்த தியேட்டரிலும் ஓடவில்லை என்று கூறிவிட்டு தேனுவை தேடி கிளம்புகின்றனர். ஹாஸ்பிடலில் அபார்ஷனுக்கு தயாராகி கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களை தேடி சக்தியும் வேலுவும் ஹாஸ்பிடலுக்கு வந்துவிடுகின்றனர். எமெர்ஜென்சி அறையில் தேனுவை காப்பாற்ற உள்ளே செல்ல முயலும் சக்தியை தென்னரசு தடுக்கிறார். வேலு தென்னரசுவை பிடித்துக்கொண்டு சக்தியிடம் அண்ணியை போய் காப்பாற்று சக்தி என்று கூறுகிறான். இதோடு இன்றைய எபிசொட் முடிந்தது. மேலும் அறிய விஜய் டிவியின் சக்திவேல் தொடரை காணாதவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...