நடிகர் டேனியலுக்கு ஆப்பு வைத்த மோசடி கும்பல் : ஆசைப்பட்ட பாலகுமாரனுக்கு நேர்ந்த சம்பவம்

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஒரு வசனம் வரும். ஃபிரண்டு.. லவ் பெயிலியரு..பீல் ஆகிட்டாப்ள என்று. இந்த ஒரு வசனம் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரத் துவங்கியவர் டேனியல். இதற்கடுத்து இவர் நடித்த மரகத நாணயம் படத்திலும் காமெடிக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து இரண்டாம் குத்து என்ற அடல்ட் காமெடி படத்தில் நடித்து தன்னுடைய இமேஜைக் கெடுத்துக் கொண்டார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

தற்போது இவருக்கு இவரே ஃபீல் ஆகிட்டாப்பள போலும்.. பண மோசடியால் பாதிக்கப்பட்டு சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார் நடிகர் டேனியல். மேலும் தான் ஏமாந்தது குறித்து அவரே வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில், “நான் நோ புரோக்கர் ஆப் மூலம் சென்னையில் வீடு வாடகைக்குத் தேடிக் கொண்டிருந்ததாகவும், அதில் எஸ்.டி.எஸ்.கே பிராப் டெக் என்ற நிறுவனம் தொடர்பு கொண்டு 17 இலட்சம் எங்களிடம் செலுத்தினால் குத்தகைக்கு வீடு பார்த்து தருவதாகவும், மாதா மாதம் வீட்டு வாடகையை தாங்கள் செலுத்தி விடுவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகையை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் கூறியதன் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு பணத்தை அளித்து பின் போரூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியதாகவும் கூறியுள்ளார்.

இதனாலதான் தல அஜீத் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் வருவதில்லையா? ரகசியம் இதான்..!

மூன்று மாதங்களுக்குப் பிறகு வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யச் சொல்ல அப்போது தான் தான் ஏமாந்து போனதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் டேனியல்.மேலும் என்னைப் போன்ற பலரிடம் அந்த நிறுவனம் மோசடி செய்ததாகவும் பெங்களுரில் அந்நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.“

டேனியல் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்க, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர். ரூ.17 இலட்சம் பணத்தை நடிகர் டேனியல் ஏமாந்தது குறித்து அவர் போட்ட வீடியோ பதிவு சோஷியல் மீடியாவில் வைராக பரவி வருகிறது.

ஃபீல் ஆயிட்டாப்ள என்ற வசனம் மூலம் பிரபலமான டேனியலே தற்போது ஃபீல் ஆகி வீடியோ வெளியிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...