வாரிசு படத்தை பார்த்த RRR ஹீரோ ராம் சரண்! வெளியிட்ட மாஸ் அப்டேட் !

தளபதி விஜய்யின் வாரிசு படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கிய இப்படம் தெலுங்கில் வரசுடு என்ற பெயரில் சங்கராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 12,2023 அன்று வெளியாகிறது.

அதே நாளில் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் ஜனவரி 13, 2023 அன்று வெளியாகும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் துணிவு போன்ற பெரிய படங்களுடன் இந்த படம் மோத உள்ளது.

இத்தனை போட்டிக்கு நடுவில் ராம் சரணுக்கு வாரிசு படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்தார் நட்சத்திர தயாரிப்பாளர் தில் ராஜு. ராம் சரண் படத்தை ரசித்து ஒட்டுமொத்த டீமையும் வாழ்த்தினார் என்பது உள் பேச்சு.

தமன் இசையமைக்கும் ஆர்சி15 படத்தின் வேலைகளுக்காக ராம் சரண் சென்னையில் இருந்தார். ஸ்டுடியோவில் ஆர்சி15 படத்தை தயாரிக்கும் தில் ராஜு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் மாஸ் அப்டேட்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

ராம் சரண் வாரிசுவைப் பாராட்டுவது ஒட்டுமொத்த டீமுக்கும் ஒரு ஊக்கமாக அமைந்துஉள்ளது . இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.