நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அதே போல் சங்கீதா, சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் படத்தின் 3 பாடல்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த சூழலில் விஜய்யின் வாரிசு படத்திற்கு தணிக்கை குழு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல் படத்தின் கால அளவு 2 மணி நேரம் 50 நிமிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் பணிகள் நிறைவடையாமல் உள்ளதால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகலாம் என படக்குழுவினர் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.