தூள் தூளான பொல்லார்ட், கெயில் ரெக்கார்ட்.. சிக்ஸ் அடிப்பதில் ரோஹித்தின் தனி ரகம்..

இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் அனைத்து சர்வதேச அணிகளில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மீதும் பார்வை பெரிதாக உள்ளது. இந்திய அணியில் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சீனியர் வீரர்கள் என்பதால் டி 20 தொடரில் இடம்பெற மாட்டார்கள் என கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விமர்சனம் எழுந்து வந்தது.

ஹர்திக் பாண்டியா தலைமையில் துடிப்பான இளம் வீரர்களை அனுப்பினால் நிச்சயம் உலக கோப்பையை இந்திய அணி சொந்தமாக்கி விடும் என்றும் பலர் குறிப்பிட்டனர். ஆனால் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில், பேட்டிங் மூலம் அனைத்து விமர்சனங்களையும் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் தவிடு பொடியாக்கி வருகின்றனர்.

விராட் கோலி 7 போட்டிகள் ஆடி 361 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ரோஹித் ஷர்மா 7 போட்டிகளில் 297 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவர்கள் இரண்டு பேருமே இந்த சீசனில் சதமடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இரண்டு பேரும் டி 20 உலக கோப்பையில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்ற வதந்தியும் பரவி ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த நிலையில் இவை அனைத்தும் பொய் என ரோஹித் உறுதி செய்திருந்தார்.

மேலும் இளம் வீரர்கள் துடிப்புடன் செயல்படும் ஐபிஎல், டி20 போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்து கோப்பையை கைப்பற்ற உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடைய ரோஹித் சர்மா மிக முக்கியமான ஒரு சாதனையை ஐபிஎல் தொடரில் படைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தாலும், ரோஹித் ஷர்மா சதமடித்து அனைவரது கவனத்தையும்.ஈர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி வெற்றி பெற்றிருந்த போட்டியில் மூன்று சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்து ரோகித் அவுட்டாகி இருந்தார்.

இந்த 3 சிக்ஸர்கள் மூலம் மும்பை அணிக்காக அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன்பாக பொல்லார்ட் 223 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் இருந்ததையடுத்து, அதனை முந்திய ரோஹித் சர்மா 224 சிக்ஸர்கள் சேர்த்துள்ளார். அதே போல, ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த கணக்கில் க்றிஸ் கெயில் 35 முறை அதனை நிகழ்த்தி இருந்தார். தற்போது அந்த சாதனையையும் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...