இத்தனை வருஷம் ஐபிஎல் ஆடியும்.. தொடாத உயரத்தை எட்டி சரித்திரம் படைத்த ரோஹித்.. வேற லெவல் பாஸ்..

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை பற்றி தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய போட்டியில் ஒன்றாக கருதப்படும் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டி முழுக்க முழுக்க ஒரு பக்கமாகவே நடந்தது போல தான் இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 196 ரன்கள் எடுத்த போதிலும் அவரது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாமல் போனதன் காரணமாக 16 வது ஓவரிலேயே தோல்வி அடையும் நிலையும் உருவாகி இருந்தது. ஆர்சிபி அணியின் பந்து வீச்சின் அடிப்படையில் பார்க்கும் போது அவர்கள் 250 ரன்கள் அடித்தால் கூட வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்று தான் தெரிகிறது.

அந்த அளவுக்கு மோசமான ஒரு பந்து வீச்சை கொண்டுள்ள பெங்களூரு அணி நிச்சயம் அடுத்த சீசனிலாவது பந்து வீச்சில் அதிக பலத்துடன் இருக்கும் வீரர்களை தேர்வு செய்து களமிறங்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தது மும்பை அணியின் தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப். பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள்ளேயே தனது அரை சதத்தை கடந்திருந்த இளம் வீரர் இஷான் கிஷன், ரோஹித்துடன் இணைந்து மிக அருமையாக ஆடி இருந்தார்.

ரோகித் சர்மாவும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பவுண்டரிகளாக மாற்றி இருந்த நிலையில் தான் இருவருமாக இணைந்து ஒன்பது ஓவரிலேயே நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். இதனால் பின்னால் வந்த வீரர்களும் அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ரன் சேர்க்க அந்த அணி 16 வது ஓவரிலேயே இலக்கை எட்டி இருந்தது.

இந்த நிலையில் இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஆடிவரும் ரோஹித் சர்மா முதல் முறையாக ஒரு முக்கியமான சம்பவத்தை செய்துள்ளார். மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்காக ஆடியுள்ள ரோஹித், இதுவரை 93 ஐபிஎல் போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். அப்படி இருந்தும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ஒரு முறை கூட அவர் தன்னுடன் ஆடிய சக வீரருடன் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததில்லை.

அப்படி இருக்கையில், முதல் முறையாக தொடக்க வீரராக இறங்கி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஒரு பங்கினை ரோஹித் ஷர்மா வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...