ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. திருமண தடைகள் விலகும்!

Rishabam Guru Peyarchi 2024: மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் ராசிக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதி. அதேபோன்று பதினோராம் இடத்திற்கும் குரு பகவான் தான் அதிபதி. இதனால் கஷ்டங்களை கொடுப்பவரும் அதனை நிவர்த்தி செய்பவரும் குரு பகவானாக இருப்பார்.

இவ்வளவு காலம் ரிஷப ராசிக்கு 12-ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் ஏராளமான செலவுகளை கொடுத்திருப்பார். காரிய தடை தாமதங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இப்போது குரு பகவான் ஜென்ம குருவாக மாற இருக்கிறார். இதனால் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

ஜென்ம குரு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்யும் முன்பே தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதால் அதனை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அஷ்டம ஸ்தானத்திலிருந்து ஜென்ம குருவாக வரும் குரு வழக்கு விவகாரங்களில் இருந்த இழுபறியை முடிவுக்கு கொண்டு வந்து சாதகமான பலன் கிடைக்கச் செய்வார்.

அதேபோன்று நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். குரு இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுத்தாலும் அவரது பார்வை எப்போதும் நல்லதாகவே அமையும்.

ஜென்மத்தில் இருக்கும் குரு பகவான் சப்தமஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் திருமண தடைகள் விலகும். அதேபோன்று ஐந்தாம் இடத்தை ஐந்தாம் பார்வையாக குரு பகவான் பார்க்கும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குருவின் பார்வை ஒன்பதாம் இடத்தில் விழும்போது பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். மேலும் கூடுதல் பலன்களை பெற ரிஷப ராசி அன்பர்கள் வியாழன் கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்வேத்தியம் செய்து விளக்கு போடுவது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews