இப்படியுமா பண்ணுவாங்க.. மணமேடையில் மணமக்கள் செய்த செயலால் அதிர்ச்சிக்கு ஆளான உறவினர்கள்!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது திருமணம். திருமணம் செய்யும் அந்த ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் செய்யும் செலவே அவர்களின் பாதி வாழ்நாள் கடனாக முடிகின்றது.

வரதட்சணையாக நகை, பாத்திரங்கள், உடை, வாகனம் எனவும் அதுபோக திருமண செலவுகள் என இருவீட்டாரும் பெரிய அளவில் செலவு செய்து திருமணத்தைக் கொண்டாடுவர்.

திருமணம் நடைபெறும் நாளில் ஒவ்வொரு நிகழ்வும் பல ஆண்டுகள் கழித்தும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும் ஒரு ஸ்வீட் மெமரியாக இருக்கும்.

ஆனால் ஒரு திருமணத்தில் மணமகளும் மணமகனும் கோபத்தில் இனிப்பையும், தண்ணீரையும் தூக்கி வீசி எறிந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது ஐயர் மணமேடையில் இருக்கும் மணமக்களுக்கு சம்பிரதாயம் ஒன்றினைச் செய்கிறார். அந்த சம்பிரதாயத்தின்படி ஐயர் மணமகனுக்கு ஸ்வீட் ஒன்றினைக் கொடுக்க அதை மணமகன் மணமகளுக்கு கொடுக்கின்றார்.

ஆனால் மணமகள் என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை அதை வீசி விடுகிறார். அதனைத் தொடர்ந்து ஐயர் மணமகளிடன் டம்ளரில் தண்ணீர் கொடுக்க, அதை மணமகள் மணமகனுக்கு கொடுக்கிறார்.

பழிக்குப் பழி என்ற நோக்கில் மணமகன் அதை தூக்கி வீசி விடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த உறவினர்களோ அதிர்ச்சியாகி விட்டனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை கலாய்த்துத் தள்ளுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.