சென்னை 28-னு டைட்டில் உருவாக காரணமே வாலி தான்.. வெங்கட் பிரபுவின் சக்ஸஸ் பார்முலா பின்னணி..

தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் சீரியஸான இயக்குனர்களும், கமர்சியல் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களும், காதல் கதையில் படம் எடுக்கும் இயக்குனர்களும் உள்ளனர். ஆனால் அதே வேளையில் வெங்கட் பிரபு போன்று மிக ஜாலியாக திரைப்படம் எடுப்பதுடன் வெளியிலும் கூட அதே போல இருக்கும் ஒரு இயக்குனரை பார்ப்பது மிக மிக அரிதான ஒரு விஷயம்.

சென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தனது திரைப்படங்களில் பெரும்பாலும் ஒரு நண்பர் கேங்குடன் இணைந்து பல ஜாலியான திரைப்படங்களை இயக்கி உள்ளார். சரோஜா, கோவா, சென்னை 28 பார்ட் 2, பிரியாணி என பல திரைப்படங்களை அந்த வரிசையில் சொல்லலாம்.

அதே வேளையில் அஜித்குமாரை வைத்து மங்காத்தா என்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுத்துள்ள வெங்கட் பிரபு, சிம்புவுடன் மாநாடு, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார். தெலுங்கில் இவர் இயக்கிய அறிமுக திரைப்படமான கஸ்டடி, கடந்த ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் அந்த அளவுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அப்படி ஒரு சூழலில் அவரது முதல் படமான சென்னை 600028 படத்தின் தலைப்பு பற்றி மறைந்த பாடலாசிரியர் வாலி ஒரு நிகழ்வில் பேசியிருந்த விஷயம் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. அதில் கவிஞர் வாலி பேசிய கருத்தின் படி, “வெங்கட் பிரபு இயக்குனராக ஆனதும் என்னிடம் தான் அனுப்பி வைத்தார்கள். நான் அவரிடம் படத்தின் தலைப்பு என்னவென்று கேட்க, ‘இது எங்க ஏரியா உள்ள வராதே’ என்று என்னிடம் கூறினார். ஒருத்தரும் வாங்க வர மாட்டாங்க இந்த படத்தை என நான் கூறினேன்.

அதன் பின்னர் நான் தான் படத்தின் பெயரை சென்னை 28 என்று மாற்றினேன். பின்னாளில் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, வெங்கட் பிரபு விலைமதிப்புள்ள இயக்குனராகவும் உள்ளார். அவர் காஸ்ட்லியஸ்ட் இயக்குனர் என்று நான் எப்படி சொல்கிறேன் என்றால் அவர் படத்தில் நான் பாடல்கள் எழுதினால் எனக்கு உடனடியாக சம்பளம் வருகிறது.

அவர் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் என்னை அவர் படத்தில், சம்பளம் அதிகம் வாங்கும் என்னை பாடல் எழுதவே விட்டிருக்க மாட்டார்கள்” என வாலி மிக நகைச்சுவையாக பேசி இருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...