ஆன்மீகம்

நினைத்தது நிறைவேறும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இடம்தான் ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.

இந்த கோவிலை ஸ்தாபித்தவர் பாலமுருகனடிமை ஸ்வாமிகள் என்பவர் ஆவார்.

இத்தலத்து முருகனுக்கு மலர்கள், நைவேத்யம், அர்ச்சகர் என எல்லாமே 6 தான். காரணம் முருகன் ஆறுமுகன் என்ற பெயருடையவன் என்பதால்.

குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப 1960களில் இக்கோவில் மிகச்சிறிய கோவிலாக இருந்தது.ஒரு முறை இக்கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் முருகனுக்கு தீபாராதனை காட்டும்படி கேட்க அங்கிருந்த அர்ச்சகர் கற்பூரம் இல்லை என சொல்லி இருக்கிறார். முருகனுக்கு தீபாராதனை செய்யமுடியாத கோவில் எதற்கு என நினைத்த மாத்திரத்தில் முருகன் அவருள் தோன்றி பேசினார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அவர் கோவில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை என சொல்லி அங்கேயே உட்கார்ந்து விட்டார். பல வருடங்களாக இன்று வரை யாரிடமும் அவர் பேசியதில்லை. மெளனசாமியாக இருக்கும் பக்தர்கள் ஏதாவது கோரிக்கை குறித்து கேட்டால் எழுதி காண்பிப்பார்.

இந்த ரத்தினகிரி முருகன் கோவிலை கட்டியவர் அவர்தான்.

வேலூர் சென்றால் அங்கு புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரை தரிசிப்பதோடு மலை மேல் இருக்கும் இந்த முருகனையும் தரிசிக்க மறவாதீர்கள்.

Published by
Abiram A

Recent Posts