விஜய் தேவரகொண்டா டிரெஸ்ஸ கூட விடலையே ராஷ்மிகா!.. காதலை சும்மா டீகோட் பண்ண விடுறாங்களே!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதை தொடர்ந்து மறைமுகமாக தெரிவித்து வருகின்றனர்.

கன்னட திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனைத்தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் அசத்தி வருகிறார்.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா காதல்:

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு டேட்டிங்காக மாறி பல இடங்களிலும் இருவரும் ஒன்று சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

மேலும், டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கள் பரவிவரும் நிலையில் அதை உறுதிபடுத்துவதற்காக ஒரே உடையை அணிந்தார்களா அல்லது விஜய் தேவரகொண்டாவின் ரவுடி பிராண்டுக்கு விளம்பரப்படுத்தும் வகையில் செய்தாரா ராஷ்மிகா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இருவரும் ஒரே டிரெஸ்:

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஃபேமிலி ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராமில் படத்தின் செட்டில் இருந்து எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். ராஷ்மிகாவும் தனது இன்ஸ்டாவில்அந்த படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டதால், இரண்டு படங்களும் ஃபேமிலி ஸ்டாரின் செட்களில் இருந்து வந்தவை என்று தெளிவாக தெரிகிறது.

அண்மையில் ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ சர்ச்சையை கிளப்பியது. அதை தொடர்ந்து, அமிதாப் பச்சன், இஷான் கட்டர், மிருனாள் தாகூர், விஜய் தேவரகொண்டா உட்பட பல பேர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தெலுங்கானாவில் மாநில தேர்தலுக்கு வாக்களிக்க சென்ற விஜய் தேவரகொண்டா RWDY ஹூடியை அணிந்து இருந்தார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘அனிமல்’ படத்தின் பிரீமியர் ஷோ மும்பையில் நடைபெற்றது. அந்த ஷோவுக்கு வந்த ராஷ்மிகாவும் RWDY ஹூடியை அணிந்து இருந்தார். RWDY என்பது விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஆடை நிறுவனத்தின் பிராண்ட் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இருவரும் ஒரே உடையை அணிந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக மாலத்தீவில் ஒரே ரெசார்ட்டில் இருந்த புகைப்படங்களும், ராஷ்மிகாவின் கூலர்ஸை விஜய் தேவரகொண்டா அணிந்திருந்தது என ஏகப்பட்ட சிக்னல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சமீபத்தில் பாலய்யாவின் ஷோவில் ரன்பீர் கபூர் விஜய் தேவரகொண்டாவுக்கு போன் போட்டு ராஷ்மிகாவுக்கு கொடுத்து வெட்கப்பட செய்திருந்தார். இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக எப்போது அறிவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.