ராதிகாவாலதான் அந்த பட வாய்ப்பை இழந்தேன்… உண்மையை உடைக்கும் பிரபல நடிகை விஜி சந்திரசேகர்…

தமிழில் தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துணைகதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை விஜி சந்திரசேகர். இவர் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர்  மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது சன் டிவியில் ஒளிப்பரப்பாகிய அழகி சீரியலின் மூலம்தான்.

படிப்பு மற்றும் வீணை வாசிப்பதில் ஆர்வம் மிகுந்த இவர் சினிமாவில் வருவதற்கான எண்ணமே இல்லாமல் இருந்தாராம். ஆனால் முதன் முதலில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த இவருக்கு அவ்வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம் எனும் எண்ணம் வந்தந்தாம். அப்படிதான் இவர் சினிமாவில் நுழைந்தாராம்.

இந்த பாடகர் தான் வேண்டும் என நடிகர் திலகம் சிவாஜி அடம் பிடித்த பாடகர்!

இவர் மேலும் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் முதலில் அப்படத்திற்கு அழைத்தபோது முதல் மரியாதை ராதா கேரக்டருக்கு இணையான கதாபாத்திரம் என சொல்லிதான் அழைத்தார்களாம். இவரும் மிகுந்த ஆசையில் வந்தாராம். கடைசியில் வடிவேலுக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்களாம்.

அது இவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்ததாம். ஆனால் பாரதிராஜாவின் ஃபிரேமில் நடித்தால் போதும் என  நினைத்த இவர் அவ்வாய்ப்பை பயன்படுத்தி கொண்டாராம். அதன்பின் வடிவேலுவுடன் நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோது இவர் அதை பயன்படுத்தி கொள்ளவில்லையாம். இவர் மேலும் மணிரத்னம், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் போன்ற பல இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சிட்டிசன் படம்.. தாமதமாக வந்த மேக்கப் ஆர்டிஸ்ட்.. அஜித் செய்த செயல்..!!

இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் மருத. இப்படத்தில் இவருடன் இணைந்து ராதிகா, சரவணன் போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படத்தில் விவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் ராதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்தானாம்.

ஆனால் திடீரென ஒரு நாள் இயக்குனர் கால் செய்து உங்கள் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்க போகிறார். நீங்கள் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிங்க… அதுதான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என கூறினாராம். அது ராதிகாவால்தான் நடந்ததா என தெரியவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் தெரிவித்துள்ளார்.

பழைய பன்னீர் செல்வமாக மாறிய சமந்தா!.. தாறுமாறு போட்டோக்களை போட்டு மாஸ் காட்டுறாரே!..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.