பழைய பன்னீர் செல்வமாக மாறிய சமந்தா!.. தாறுமாறு போட்டோக்களை போட்டு மாஸ் காட்டுறாரே!..

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் பழையபடி பக்கா கிளாமர் குயினாக மாறியுள்ளார்.

டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு தனது கணவரை பிரிவதாக முதலில் சோசியல் மீடியாவில் அவரது குடும்பப் பெயரான அக்கினேனியை தூக்கி சிக்னல் கொடுத்தார். சமந்தா விவாகரத்து செய்வதாக வதந்திகள் பரவ ஆரம்பித்த நிலையில், அது உண்மைதான் என நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

408805970 1116401703101767 4860416778814079835 n

சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

கணவரை பிரிந்த பின்னர் தொடர்ந்து பாலிவுட், சர்வதேச திரைப்படம் என நடித்து அசத்து வருகிறார் சமந்தா. டோலிவுட்டில் அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சாகுந்தலம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து சமந்தா நடித்த குஷி திரைப்படம் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தது. அடுத்ததாக பாலிவுட்டில் வருண் தவானுடன் இணைந்து சிட்டடல் எனும் வெப்சீரிஸ்-இல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென ரசிகர்களுக்கு சனிக்கிழமை பார்ட்டி வைப்பது போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி உள்ளார் சமந்தா.

408445726 323578397107844 6961380936981942824 n

ரியாலிட்டி ஷோவில் கலக்கல்:

சாகுந்தலம் மற்றும் குஷி உள்ளிட்ட படங்களின் புரோமோஷன்களின் போது கண்ணீர் மல்க டல்லான முகத்துடன் பேட்டி கொடுத்து உன்னை சமந்தா, தற்போது 100% அந்த நோய் பிடியிலிருந்து மீண்டு விட்டது போலவே தெரிகிறது.

டெனிம் டாப் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தாறுமாறாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தற்போது சமந்தா வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார்.

MTv நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இப்படி ஒரு உடையை அணிந்து கொண்டு நடிகை சமந்தா பங்கேற்ற நிலையில், தற்போது அந்த உடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு தனது 30 மில்லியன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முன்னதாக பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இருந்த சமந்தா தற்போது ஷோவில் கலந்து கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews