திடீரென நின்று போன கார்த்திக்கின் படம்.. மனோபாலாவை இயக்கச் சொன்ன தயாரிப்பாளர்.. அதுக்கு என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வந்தவர் நடிகர் மனோபாலா. ஆகாய கங்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து வந்தவர் மனோபாலா.

கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் இயக்கி ஒரு நல்ல இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றவர் மனோபாலா. தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக ஆரம்பித்த தனது வாழ்வை படிப்படியாக ஒரு நடிகராக மாற்றினார்.

manobala

ஏராளமான படங்களில் ஒரு நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றவர். பெரும்பாலும் இவரின் உடம்பை வைத்தே கேலிச்சித்திரமாக பல நகைச்சுவை காமெடிகள் வந்திருந்தன. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சினிமாவிற்காக தனது பங்களிப்பை முழுவதுமாக கொடுத்தார் மனோபாலா.

முதல்வன் படப்பிடிப்பில் ஹோட்டல்காரரிடம் மாட்டிக் கொண்டு முழித்த ஏஆர்.ரகுமான்! நடந்த சம்பவமே வேற..!

இந்த நிலையில் மனோபாலா கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கிழக்கு வாசல் என்ற திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தமிழில் அவர் இயக்கிய என் புருஷன் எனக்கு மட்டும்தான் என்ற படத்தை ஹிந்தியிலும் இயக்குவதாக இருந்தது. அதனால் அவர் மும்பை சென்று விட்டாராம். அதன் பிறகு கிழக்கு வாசல் படத்தின் தயாரிப்பாளர் சத்திய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இயக்குனர் ஆர்.வி. உதயகுமாரிடம் படத்தை இயக்கச் சொல்லி கேட்டிருக்கிறார்.

manobala

ஆர்.வி. உதயகுமார் படத்தை பாதி வரைக்கும் எடுத்த நிலையில் திடீரென அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டதாம். அதனால் படம் பாதியிலேயே நின்று விட்டது. அந்த நேரத்தில் தியாகராஜன் படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மறுபடியும் மனோபாலாவிடம் மீதி படத்தை நீங்கள் இயக்குங்கள் என்று சொன்னாராம்.

என்னைப் போய் இப்படி ஆக்கிட்டாங்களே..? சத்யராஜ் வருத்தப்பட்ட கதாபாத்திரம்..!

அதற்குள் மனோபாலா ஹிந்தியில் அந்தப் படத்தையும் முடித்துவிட்டு வர தியாகராஜன் சொன்னதையும் கேட்டு மருத்துவமனையில் இருந்த ஆர்.வி. உதயகுமாரை போய் சந்தித்திருக்கிறார். திரும்பி வந்த மனோபாலா தியாகராஜனிடம் இரண்டு வருடங்கள் ஆனாலும் இந்தப் படத்தை உதயகுமார் இயக்குவது தான் சரி. அதனால் கொஞ்ச நாட்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னாராம்.

அந்தப் படம் எப்பேர்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும. அந்தப் படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் உதயகுமார் மனோபாலாவிடம் இந்த வெற்றிக்கும், எனக்கு கிடைத்த பெருமைக்கும் நீங்களே ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லி தனது மகிழ்ச்சியை தெரிவித்தாராம்.

ஒரு வாரத்தில் ரிலீஸ்.. ஒட்டுமொத்த கதையையும் மாற்ற சொன்ன ராவுத்தர்.. விஜயகாந்த் படத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி..!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...