சூப்பர்ஸ்டார் ரஜினி பார்க்கும் டிவி சீரியல் இதுதான்… டைரக்டர் திருச்செல்வம் சொல்றதைக் கேளுங்க…

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துல நடிச்சிருக்காரு. விரைவில் படம் ரிலீஸாகத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்ல ரஜினி டிவி சீரியல் எதிர்நீச்சல் பார்க்குறது தெரியவந்தது. இதை அந்த சீரியலோட டைரக்டர் திருச்செல்வம் இவ்வாறு சொல்கிறார்.

Thiruchelvam
Thiruchelvam

ஜெயிலர் படத்துல மாரிமுத்து நடிச்சிருக்காரு. அவரு அதுல ஒரு கதாபாத்திரம் நடிக்கிறாரு. அவரைப் பார்த்ததும் பேச ஆரம்பிச்சிட்டாரு. பரியேறும் பெருமாள் பத்தி பேசி எதிர்நீச்சல் இப்ப பண்றீங்கள்ல. எங்க வீட்டுல பார்க்குறாங்க. ஆனா தொடர்ந்து பார்க்க முடியாது. நான் ரெஸ்ட்ல இருக்கும்போது அப்பப்ப பார்ப்பேன்னு சொன்னாரு.

கோலங்கள் சீரியல் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போ ரஜினி சார் என்னைப் பார்க்கணும். அவரை கூட்டிட்டு வாங்கன்னு அவரோட நண்பர் நடராஜ் சாருக்கிட்ட சொன்னாரு. நான் வந்து ராகவேந்திரா மண்டபத்துக்குப் போனேன். அங்க நிறைய கூட்டம் இருக்கும்னு பார்த்தா யாருமே இல்லை. விட்டல் சார் மட்டும் இருந்தாரு. அவரோட பிரண்டு. கரெக்டா 15 நிமிஷம் கழிச்சி ஒயிட் அண்ட் ஒயிட் போட்டு வந்தாரு. எனக்கு அவரைப் பார்த்ததும் ஒண்ணுமே ஓடல. என்னை அப்படியே பார்த்துக்கிட்டு இருந்தாரு.

எப்படின்னாரு. 1533 எபிசோட்ஸ். அதுல அவ்ளோ டீட்டெய்ல். பேரு திருச்செல்வம்னாரு. என் பேரு எப்படி தெரிஞ்சி வச்சிருக்காரு. நீங்க எவ்ளோ பெரிய ஆக்டர்னு சொன்னேன். நடிகர்ங்கறது பெரிய விஷயம் கிடையாது. காலைல என்னை எழுப்பி சூட்டிங்குக்கு கூட்டிட்டுப் போவாங்க. அங்க போனதுக்கு அப்புறம் அங்க சீன் எடுத்தாலும் சரி. எடுக்கலன்னாலும் சரி. நடிகர்கள் மாதிரி சுகவாசி எவனுமே கிடையாது.

Rajni
Rajni

நீங்க வந்து சீரியல் டைரக்டர். ரொம்ப பிரமிக்க வைக்குது உங்க சீரியல். கண்டிப்பா வந்து பெரிய விஷயம். நீங்க சினிமாவுக்கு வரணும். உங்க கிட்ட திறமை இருக்கு. படம் பண்ணனும். நல்ல கம்பெனிக்குப் பண்ணுங்கன்னாரு.

என்றும் மனதை விட்டு நீங்காத 90களின் குழந்தை பருவத்தை நினைவூட்டும் சீரியல் பாடல்கள் ஒரு பார்வை!

கதை ஏதாவது வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. நான் அப்போ தான் பொலிட்டிகல் ஸ்டோரி பண்ணி வச்சிருக்கேன். நான் அதை சொல்லாம ஹீரோயின் ஒரியண்டடா கதை சொல்றேன். நான் கேட்குறேன். ஹீரோயின் ஒரியண்டடா சொல்றீங்க.

இல்ல சார் இப்ப பண்ணிக்கிட்டு இருந்தேன். அதான் சொன்னேன். வெரிகுட். எனக்கும் அப்படித்தான் தோணும். வள்ளி தான் எனக்குத் தோணுச்சு. 45 மினிட்ஸ் பேசிக்கிட்டே இருந்தோம். போகும்போது என்னை அவருகூட சேர்ந்து கேமரா கொண்டு வரச்சொல்லி போட்டோ எடுக்க வச்சி அதை பெரிய சைஸ்ல பிரேம் போட்டு எனக்கு ஈவ்னிங் அனுப்பி வச்சாரு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...