கே.வி ஆனந்தின் ஆக்சன் ஸ்கிரிப்டில் உருவாகும் ரஜினியின் 172வது திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி 169 திரைப்படம் ஆன ஜெயிலர் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வெற்றி நடை போட்டது. இந்தத் திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளியாகி இருந்தது. மல்டி ஸ்டார் படமாக உருவாகியிருந்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி ரஜினிக்கு அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அந்த வகையில் ரஜினி தற்போது தனது 170வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலு இயக்கத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்தை தொடர்ந்து மும்பையில் தற்பொழுது படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பின் போது ரஜினியுடன் பழம்பெரும் நடிகர் அபிஷேக் பச்சன் இணைந்து நடித்துள்ளார். அதி வேகத்தில் நடைபெறும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக தனது 171வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து நடிக்க உள்ளார். சமீபத்தில் லோகேஷ் அளித்த பேட்டியில் ரஜினியிடம் தனக்கு பிடித்த வில்லத்தனத்தை தாம் இயக்கும் படத்தில் அதிகமாக வெளிக்காட்ட உள்ளதாக கூறியிருந்தார். அதாவது வில்லத்தனம் நிறைந்த ஹீரோவாக ரஜினி நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கத்திற்காக தான் ஆறு மாத காலம் சோசியல் மீடியாவில் இருந்து விலகி படத்தின் கதையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதிலும் எழுந்து வருகிறது. அந்த வகையில் ரஜினியின் 172வது திரைப்படம் குறித்த ஒரு மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. லோகேஷ் படம் நிறைவடைந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேவி ஆனந்த் உருவாக்கிய ஒரு ஆக்சன் ஸ்கிரிப்ட் கதையில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

சிறந்த ஒளிப்பதிவாளராக காதல் தேசம், முதல்வன் போன்ற படங்களில் பட்டையை கிளப்பி வந்த கே வி ஆனந்த் இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் கனா கண்டேன். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தாலும் இந்த திரைப்படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் அயன். இந்த திரைப்படம் கே வி ஆனந்திற்கு மட்டுமல்லாமல் நடிகர் சூர்யாவிற்கும் பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அயன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து மாபெரும் வசூல் சாதனையும் படைத்தது. அதைத்தொடர்ந்து கே வி ஆனந்த் இயக்கிய கோ திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த கேவி ஆனந்த் கொரோனா காலகட்டத்தின் பொழுது இறைவனடி சேர்ந்தார். அவர் இறந்த நேரத்தில் நடிகர் சிம்பு வைத்து ஒரு படம் இயக்க இருந்ததாகவும், அதை தொடர்ந்து ஒரு மாஸ் ஹீரோவிடம் கதை கூறி வந்ததாகவும் ஒரு கருத்துக்கள் வெளியாகியிருந்தது. அந்த மாஸ் ஹீரோ வேறு யாருமல்ல நம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான். கே வி ஆனந்த் மாற்றான் படத்தை இயக்கிக் கொண்டிருந்த பொழுது நடிகர் ரஜினிகாந்த் அழைத்து தனக்கு ஒரு கதை தயார் செய்யும் படி கூறியிருந்தார். அதன் பின் ரஜினிக்காக கே வி ஆனந்த் கதை உருவாக்க தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக மாற்றான் படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ரஜினி அந்த படத்தில் நடிக்க பின் வாங்கினார்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி கோடிக்கணக்கில் வசூலை அள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதியின் திரைப்படங்கள்!

தற்பொழுது கே வி ஆனந்த் உருவாக்கிய அந்த ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்து ஏஜிஎஸ் நிறுவனம் படமாக எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க பேசப்பட்டு வருகிறது. ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் ரஜினி தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதியாக உள்ளது. மேலும் கே வி ஆனந்த் அவருக்காக இந்த படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஹீரோக்கள் உறுதியாகும் பட்சத்தில் இந்த படத்தை யார் இயக்க உள்ளார் என்பது தற்பொழுது கேள்வியாக உள்ளது. சிறந்த இயக்குனர்கள் கையில் இந்த ஆக்ஷன் ஸ்கிரிப்ட் சென்றால் ரஜினியின் மீண்டும் ஒரு வெற்றி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாட வாய்ப்புள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews