லால் சலாம் டீசர்: இந்த தீபாவளி அதிரடி சரவெடிதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படம் ரஜினிகாந்திற்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘தலைவர் 170′ ஜெய்பீம் புகழ் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கேரளா மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றது மேலும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தலைவர் 171ன் படப்பிடிப்பு தொடங்கும். இதற்கிடையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முதல் படம் 2012ல் வெளியான ‘3’. தனுஷ்,ஸ்ருதிஹாசன் மற்றும் அனிரூத் இசையில் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தனுஷ்- ஷ்ருதிஹாசன் ரோமான்ஸால், சர்ச்சைகளுக்கும் ‘3’ படம் உள்ளனாது. 2015ல் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார்.

படம் பெரிய வெற்றியை அடையவில்லை. அதன் பின் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் உடனான திருமண முறிவிற்கு பின் சமூக வலைதளங்களில் தன்னை பற்றிய அப்டேட்களை கொடுத்து வந்தார்.

அடுத்த கட்ட மூவ் அசாத்தியமானதாக இருக்க வேண்டுமென தொடர்ந்து ஆக்டிவாக காணப்பட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மகள் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் எழுப்பி வந்தனர். இந்நிலையில், ‘லால் சலாம்’ மூலம் விடை கிடைத்திருக்கிறது.

மகள் அப்பாவை எப்படி இயக்கி இருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். ‘லால் சலாம்’ ல் சூப்பர் ஸ்டார் படம் முழுவதும் வரா விட்டாலும், அவர் திரையில் தோன்ற போகும் நேரத்தில் தியேட்டர்களில் விசில் பறக்கும். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் மெயின் கேரக்டரில் நடிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு தான் படத்தின் மையக் கரு. இந்த படத்தில் முக்கியமான ரோலில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிரோஷா.

lal salaam poster

மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ‘லால் சலாம்’ ல் நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். படம் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை முன்னிட்டு இந்த வார இறுதியில் தீபாவளி கொண்டாட்டமாய் ‘லால் சலாம்’ன் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான சென்சார் கட் வேலைகள் முடித்து விட்டதாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...