ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீமுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!.. நெகிழ்ந்துப் போன எஸ்.ஜே. சூர்யா!..

தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், அந்த படத்தின் குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்தின் புகைபடங்கள் வைரலாகி வருகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த வாரம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு குறிஞ்சிப்பூ என ரஜினிகாந்த் பாராட்டி கடிதம் எழுதிய நிலையில், நேரில் அழைத்தும் பாராட்டி உள்ளார்.

தீபாவளி வின்னர்

ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை போலவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வெற்றிப் பெற்றுள்ளது. முக்கியமாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் படத்தை இரண்டு தூண்களாக தாங்கியிருக்கிறார்கள் என்றும் இரண்டு பேரின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது என்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜின் மேக்கிங்கும் பழங்குடியினத்தை திரைக்கதையில் கனெக்ட் செய்த விதத்தையும் பாராட்டி வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கருப்பு ஹீரோவை பற்றிய கதை என்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நிஜக் கதையால் ஈர்க்கப்பட்ட கதை என்று கூறியுள்ளார். நான் மட்டும் முன்னரே பிறந்திருந்தால் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வைத்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை உருவாக்கியிருப்பேன் என்று ஆசையைய் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஜிகர்தண்டா படத்தைப் போலவே ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திலும் கேங்ஸ்டர் கதைதான் என்பதையும் கூறிப்பிட்டிருந்தார். இப்படம் இதுவரை ரூ.22 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

F USCobYAEcVY

ரஜினிகாந்த் நேரில் பாராட்டு

இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் படக்குழுவினரை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு என்றும் , எஸ்.ஜே.சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து நடித்திருந்தார் ” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

வாழ்த்து பதிவை வெளியிட்டதோடு மட்டுமின்றி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை நேரில் அழைத்தும் பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின்போது கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தனர். அதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

F 81w6yXwAAMfwO

எஸ்.ஜே. சூர்யா நன்றி

இந்த சந்திப்பு குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் அன்பிலும், ஆசீர்வதிப்பிலும் எங்களை நனைய வைத்ததற்கு நன்றி தலைவா.. உங்களுடனான ஒரு மணி நேர சந்திப்பில் எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பாசிட்டிவிட்டி வந்துவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதே போல நடிகவேள் என எஸ்.ஜே. சூர்யாவுக்கு ரஜினிகாந்த் புதிய பட்டம் கொடுத்த நிலையில், எஸ்.ஜே. சூர்யாவும் நன்றி தலைவா என பதிவிட்டுள்ளார். கூடிய சீக்கிரமே ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா காம்பினேஷன் அமையும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...