தீண்டாமைலா ஒன்னும் கிடையாது… அவரு என்னோட பிரண்டு தான்! உண்மையை உடைத்த யோகிபாபு!

தமிழ் சினிமாவில் இரண்டாம் கட்ட நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நகைச்சுவை கலைஞர், ஹீரோ, குணச்சித்திர வேடம் என பல கதாபாத்திரத்தில் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகர் யோகி பாபு.

முருகப்பெருமாளின் தீவிர பக்தரான இவர் தமிழ்நாட்டின் உள்ள அனைத்து முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுவதும், அது தொடர்பான வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் சமீபத்தில் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்குள்ள அர்ச்சகர் ஒருவரை பார்க்க சென்றுள்ள யோகி பாபு அவருக்கு கை கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த அர்ச்சகர் அதை மறுத்துள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்த வீடியோவில் தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று தலைப்புடன் சர்ச்சைக்கு உள்ளாக்கி வந்தது.

தன் சொந்த உழைப்பால் பின்தங்கிய நிலையில் இருந்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தாலும் இப்படி ஒரு தீண்டாமை கொடுமையை எதிர் கொண்டு உள்ளாரே என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த தகவல் உண்மையல்ல.

சாமி தரிசனத்தின் போது பூசாரியிடம் யோகி பாபு கை கொடுக்கப் போகும்போது அவர் கை கொடுக்காமல் மறுப்பு தெரிவித்த மாதிரி ஒரு வீடியோ வெளியாகி வைரலானதை முற்றிலுமாக மறுத்து யோகி பாபு ஆடியோ மூலமாக மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து யோகிபாபு கூறுகையில், எனக்கு அவரை 12 வருடமாக நன்றாகவே தெரியும். தயவு செய்து சாதிய பிரச்சனைகளை உண்டாக்கி வதந்திகளை பரப்ப வேண்டாம் என யோகி பாபு அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஒரு வழியாக ஜார்ஜியாவில் பாடல் காட்சியை முடித்த ‘சந்திரமுகி 2’ படக்குழு! மாஸ் அப்டேட்!

இந்த 12 வருடத்தில் நாங்கள் இருவரும் பல முறை நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணி இருப்பதாகவும், அதன் பின் அவர் கழுத்தில் போட்டிருந்த முருகன் டாலரை எங்க வாங்குனீர்கள் என நான் கேட்டேன் அதுக்கு அவர் வெளிநாட்டிலிருந்து வந்தது பா என சொல்லி இருந்தார்.

அந்த வீடியோவை தான் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளதாகவும் தயவு செய்து சாதிய பிரச்சனைகளை தூண்டுகிற மாதிரியான வதந்திகளை பரப்பாதீர்கள் எனவும் யோகி பாபு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...