கமல் தயாரிப்பில் ஹீரோவாகும் ரஜினி! இயக்குனர் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அதே உற்சாகத்தில் தலைவர் 170 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து இந்த படத்தின் காட்சிகள் திருநெல்வேலி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் முடிவடையும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத தலைவர் 170 திரைப்படம் அடுத்த வருடம் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

அதைத்தொடர்ந்து இரண்டு, மூன்று மாதங்கள் ரஜினி ஓய்வெடுக்க உள்ளதாகவும், அதன் பிறகு தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் தலைவன் 171 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் .இந்த படத்தின் பூஜை ஏப்ரல் மாதம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முழு கதை உருவாக்கத்தில் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்தது. மேலும் இந்த படத்தில் எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி இணையும் என்று இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் அமைந்திருக்கும் இந்த லோகேஷ் – ரஜினி கூட்டணி மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுக்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு லோகேஷ் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் உலக அளவில் வெளியாகி 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து நடிகர் கமலுக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்த வகையில் ரஜினி மற்றும் லோகேஷ் இணையும் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் கமலஹாசனின் தீவிர ரசிகனாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கமல், விஜய் தொடர்ந்து தற்பொழுது ரஜினியை வைத்து படம் இயக்குவது சினிமா ரசிகர்களிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் இடம் கமலின் தீவிர ரசிகனாக இருக்கும் நீங்கள் ரஜினியை வைத்து படம் இயக்குவது நடிகர் கமலஹாசனிற்கு தெரியுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் தெரியும் ரஜினி தன் படத்திற்கு ஓகே சொன்னவுடன் இந்த நல்ல செய்தியை நான் முதலில் கமலிடம் தான் சொன்னேன் என்றும் அதற்கு கமல் மிகவும் சந்தோஷப்பட்டதாகவும் கூறினார்.

திருமணத்திற்கு தயாரான அஜித் பட இயக்குனர்! மணப்பெண் யாரு தெரியுமா?

திரை உலகில் போட்டி நடிகர்களாக வலம் வரும் முன்னணி வெற்றி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் நீண்ட கால நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த இரு நடிகர்களும் ஒன்றாக இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினி ஒரு படத்தில் நடிக்க இருந்ததாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்தார். அதன் பின் கொரோனா காரணமாக இந்த படம் கைவிடப்பட்டதாகவும் அந்த படத்தை தான் இயக்கம் இருந்ததாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் முன்னணி இளம் நடிகர்களான சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்களை வைத்து படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.