தலைவர் 171 படத்தில் வில்லனாக களம் இறங்க காத்திருக்கும் 5 ஹீரோக்கள்!

தென்னிந்திய பிரம்மாண்ட இயக்குனர் ஆன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட சில குளறுபடி படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. ரசிகர்களின் எதிர்மறையான கருத்துக்களை ஏற்றுக் கொண்ட லோகேஷ் தனது அடுத்த படத்தில் சிறப்பாக செயல்பட உள்ளதாகவும் கூறியிருந்தார்.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் தளபதி விஜயின் லியோ படத்தை தொடர்ந்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் கதை உருவாக்கத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் லோகேஷ் முழு கதை தயாராகும் பட்சத்தில் அந்த கதையை தனது சினிமா வட்டார நண்பர்கள் ஆன 8 இயக்குனர்களிடம் கலந்து ஆலோசித்து அதன் பின் சிறப்பான கதையை தயார் செய்து ரஜினியை அந்த படத்தில் நடிக்க வைப்பதாகவும் முயற்சித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் தனது எல் சி யு கான்செப்ட் இல்லாமல் முழுக்க முழுக்க ரஜினியை மையப்படுத்தி உருவாக்க இருக்கும் புது கான்செப்ட் ஆக இருக்கும் என்றும் லோகேஷ் கூறி வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் மற்றும் ரஜினி இணைந்து உருவாகும் தலைவர் 171 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்த நிலையில் தலைவர் 171 படத்தின் சில அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. பொதுவாக லோகேஷ் இயக்கும் படத்தின் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஹீரோவுக்கு இணையாக வில்லனையும் மாசாக காட்டுவது தான் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகும் படங்களின் தனி சிறப்பு. தற்போது தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க சில ஹீரோக்களின் பெயர்கள் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்து முழு தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அந்த வகையில் தலைவர் 171 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், தலைவர் ரஜினிக்கு வில்லனாக அந்த படத்தில் களமிறங்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த நிலையில் ஹீரோவாக மாஸ் காட்டி வரும் லாரன்ஸ் அடுத்ததாக ரஜினியின் நடிக்கும் படத்தில் வில்லனாக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் விக்ரம் திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார். ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்த படங்களை விட வில்லனாக அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து மிகச் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகரான எஸ் ஜே சூர்யா சமீப காலமாக பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார்.

1200 கோடி பட்ஜெட்டில்.. அட்லீ இயக்கத்தில் உருவாகும் கமல் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்!

சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தில் அவரின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த நடிப்பை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்தியதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஜினியின் தலைவர் 171 படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் மற்றும் தலைவர் 170 படங்களில் வில்லனாக நடித்து வரும் பகத் பாசில் தலைவர் 171 படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்து வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் தல அஜித் ஹீரோவாக நடித்திருப்பார் அவருக்கு வில்லனாக அருண் விஜய் களமிறங்கி இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அருண் விஜய்க்கு ஹீரோவை தாண்டி வில்லன் கதாபாத்திரம் மிக சிறப்பாக பொருந்தி இருந்தது. அந்த வகையில் தலைவர் 171 படத்தில் நடிகர் ஹீரோ அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.