அதிரடி பட்டியலில் மும்பையை சமன் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. ஆனாலும் சென்னைய அசைக்க முடியலயே..

ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து அணிகளும் குறைந்த பட்சம் ஒரு தோல்வியாவது சந்தித்திருந்த சமயத்தில், நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டிருந்தது ராஜஸ்தான் அணி. அபப்டி இருக்கையில், தங்களின் ஐந்தாவது போட்டியில், குஜராத் அணிக்கு எதிராக துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிரமப்பட்டு வென்று மீண்டும் வெற்றி பயணத்திற்கு திரும்பி உள்ள ராஜஸ்தான் அணி, வரும் போட்டிகளிலும் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொருத்தவரையில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், பட்லர், சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரியான் பராக், ஹெட்மயர், போல்ட் உள்ளிட்ட பல சிறப்பான வீரர்கள் அமைந்துள்ளது அந்த அணியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு சீசன்களில் அதிர்ஷ்டம் கைகூடாமல் போனதால் இந்த முறை அவை அனைத்தையும் சரி செய்து கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, இனி வரும் போட்டிகளில் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்ற நிலையும் தற்போது உள்ளது.

ராஜஸ்தான் அணியில் தனித்தனியாக வீரர்கள் சிறப்பாக இருந்தாலும், ஒரு அணியாக செயல்படும் போது நடைபெறும் தவறுகள் தான் அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது. இந்த முறை அவை நடக்காமல், ஒரு அணியாக ராஜஸ்தான் பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கையில் தான் மும்பை அணியின் முக்கியமான ஒரு சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதல் ஆறு போட்டிகளில் 5 போட்டிகளை ராஜஸ்தான் அணி தற்போது வென்றுள்ளது. இப்படி ஒரு அணி ஆறில் ஐந்து போட்டியை வென்றுள்ள பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (5 முறை) முதலிடத்தில் உள்ளது.

இவர்களுக்கு அடுத்தபடியாக, மும்பை 3 முறை முதல் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி கண்டுள்ளது. இந்த சாதனையை தான் தற்போது ஆறில் 5 போட்டிகள் வென்று சமன் செய்துள்ளது ராஜஸ்தான் அணி (3 முறை). மும்பை, சிஎஸ்கே உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகள் வரிசையில் தற்போது ராஜஸ்தான் அணியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...