ராஜமெளலி படத்தில் விக்ரம் வேதா ஒளிப்பதிவாளர்… ஹீரோ யாரு?

RRR, பாகுபலி, ஈ போன்ற வெற்றிப்படங்களை இந்திய சினிமாவிற்கு கொடுத்தவர் ராஜமெளலி. பிரம்மாண்டத்திற்கு மறுபெயர் ராஜமெளலி என அறிப்படும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதினை பெற்றது.

இப்போது இந்தியாவின் முதன்மையான இயக்குனர்களுள் ராஜமெளலியும் ஒருவர். பிரம்மாண்ட படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக கொண்டாடப்படுகிறார். அப்படிபட்ட ராஜமெளலி, ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதில் திருப்தி இல்லாததால், தொலைக்காட்சி தொடர் ஒன்றை இயக்கினார்.

அதன் பின்பே ஸ்டூடண்ட் நம்பர்.1 என்ற தெலுங்கு படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். தற்போது தமிழ் சினிமாவில் வரும் எல்லா படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுனில் அவர்களை வைத்து ஒரு படத்தினை இயக்கினார்.

அந்தப்படம் அவருக்கு ஓரளவுக்கு வெற்றியைக் கொடுத்தது. 2009ம் ஆண்டு ராஜமெளலிக்கு முக்கியமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் ராம் சரண், காஜல் அகர்வால் நடிப்பில் ராஜமெளலி இயக்கிய ‘மகதீரா’ வெளியானது.

நிகழ்காலத்தில், முன் ஜென்மத்தை தொடர்பு படுத்திய அவருடைய திரைக்கதை மக்களை மிகவும் வியக்க வைத்தது. எம்.எம் கீரவாணி இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்து படத்திற்கு பலம் சேர்த்தது. அதன் பின், தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்து வருகிறார் ராஜமெளலி.

‘RRR’ படத்திற்கு பிறகு புதிய படங்களின் அறிவிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில், தற்போது தெலுங்குலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை இயக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படத்தின் மற்ற நடிகர்கள் பற்றியோ அல்லது பட பூஜை பற்றி தகவல்கள் வராத நிலையில், அவருடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.கே செந்தில் குமாரை மாற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

RRR,பாகுபலி, ஈ, சத்ரபதி, மகதீரா போன்ற ராஜமெளலியின் வெற்றிப்படங்கள் அனைத்திற்கும் ஒளிப்பதிவாளராக இருந்தவர் கே.கே செந்தில் குமார் அவரை மாற்றியதற்கான காரணம் தெரியவில்லை.

அடுத்து இயக்க போகும் படத்திற்கு பி.எஸ் வினோத் தான் ஒளிப்பதிவாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ் வினோத் தெலுங்கு படம் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

cinematographer

அவர் பணியாற்றிய தமிழ் படங்கள், விக்ரம் வேதா மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகும். இந்த இரண்டு படங்களிலுமே ஒளிப்பதிவு நன்றாக இருக்கும். தொடர்ந்து ஒரே ரசனையில் படமாக்காமல் மாறுபட்ட கோணத்தில் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் வேறு ஒளிப்பதிவாளரை தேர்ந்தெடுத்திருப்பார் போல ராஜமெளலி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...