இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்யும் கார்கில் வெற்றி தினம்… விஜய் திவாஸ் ஜூலை 26!

கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் போரில் வெற்றி கண்ட ராணுவ வீரர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. நம் தாய் நாட்டிற்காக பாகிஸ்தானை எதிர்த்து நடைபெற்ற கார்கில் போரில் அளவில்லா தியாகங்களை செய்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு கார்கிலை கைப்பற்ற வந்த பாகிஸ்தானை எதிர்த்து போரிட்ட இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்ட அந்த போரில் பெரும் வெற்றி பெற்றது.

Kargil

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சியாச்சின் பகுதியை மீட்க மே 8 ஆம் தேதி ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் களம் இறங்கியது இந்திய ராணுவம்.

இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ படைக்கும் பாகிஸ்தான் படைக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. இந்திய ராணுவ வீரர்கள் பலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது நம் தாய் நாட்டிற்காக போரிட்டனர். போர் நடைபெற்ற சமயத்தில் அங்கு கடுமையான பனிப்பொழிவு இருந்தது அதையெல்லாம் துச்சம் என நினைத்து ராணுவ வீரர்கள் போரிட்டனர்.

84748042

இந்திய விமானப்படையின் உதவியுடன் ஜூலை மாதம் டைகர் மலையை இந்திய ராணுவம் மீட்டது. இப்படியே படிப்படியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த ஒவ்வொரு பகுதியையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டது. டைகர் மலை, ரொலோலிங் மலை, பத்திரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை என அனைத்து பகுதிகளிலும் பாகிஸ்தானியர்களை விரட்டி இந்தியா ஜூலை 26 ஆம் தேதி மாபெரும் வெற்றி கண்டது. மே மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்த இந்த போர் ஜூலையின் இறுதியில் தான் முடிவிற்கே வந்தது.

images 5 7

இந்தப் போரில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் சரவணன் உட்பட மொத்தம் 527 இராணுவ போர் வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்து உள்ளனர். 1363 இராணுவ போர் வீரர்கள் படுகாயம் அடைந்து இருந்தனர். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த அனைத்து இராணுவ போர் வீரர்களுக்கும் இந்திய அரசு பல விருதுகளை கொடுத்து கௌரவித்தது.

இவ்வாறு நம் தேசத்திற்குள் ஊடுருவி நம் நாட்டின் பகுதிகளை கைப்பற்ற வந்த பாகிஸ்தான் ராணுவ படையை வீழ்த்தி வெற்றி கண்ட எண்ணற்ற ராணுவ போர் வீரர்களின் தியாகத்தையும், பெருமையையும் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் அதாவது கார்கில் வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 23 வது கார்கில் வெற்றி தினமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews