உங்க கலைத் தாகத்துக்கு அளவே இல்லையா..? ஐசியுவில் இருந்து கொண்டே ரவீந்தர் செய்த காரியம்!

சினிமா உலகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டையே அண்மையில் ஒரு ஜோடி தூக்கி வாரிப் போட்டது என்றால் அது ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடியாகத்தான் இருக்க வேண்டும். இருவருமே தங்களது வேறு முதல் திருமண பந்தத்தை முறித்து பின்னர் இணைந்தனர். இந்த ஜோடியைக் கண்டு தமிழகமே வாயைப் பிளந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வந்தாலும் இன்றும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

பிரபல சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் சில காலத்தைக் கழித்த இவர் தற்பொழுது இவர் நிபந்தனை ஜாமீனுடன் வெளியில் வந்துள்ளார். மேலும் இவர் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ரவீந்தர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட வீடியோவில் ‘தான் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நெஞ்சு வலி இருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும்’ கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் பற்றி உணர்ச்சி ததும்ப பேசிய நயன்தாரா.. ரியல் சூர்யவம்சமாக மாறிய மேடை

மேலும் ICU வில் ஒரு வாரம் இருந்து, தற்பொழுது ஆக்சிஜன் அதிகமாக தேவைப்படுவதாகவும், எனவே, அவர் ஆக்சிஜன் மாஸ்க் உடன் பிக் பாஸ் review செய்வதாகவும் கூறினார். உடல்நிலை இவ்வாறு இருக்கையில் ஏன் ரவீந்தர் இவ்வாறு செய்கிறார் என அவருக்கு எதிராக கருத்துக்கள் வலுத்து வருகின்றன.

தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Fatman -ன் நிலை கண்டு அவருக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.