விக்னேஷ் சிவன் பற்றி உணர்ச்சி ததும்ப பேசிய நயன்தாரா.. ரியல் சூர்யவம்சமாக மாறிய மேடை

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவர் பற்றி பேசியது வைரலாகப் பரவி வருகிறது. நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நடிப்பு மட்டுமின்றி பிற தொழில்களிலும் இத்தம்பதியினர் முதலீடுகள் செய்து நடத்தி வருகிறார்.

எஸ்.பி.பியின் நினைவிடத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா..!

அதில் ஒன்றுதான் பெண்களுக்கான அழகுப் பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் நிறுவனமான FEMI 9 நிறுவனம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது பெண்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இந்நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராகவும் நயன்தாரா இருக்கிறார்.

சமீபத்தில் Femi 9 நிறுவனம் சார்பில் பெண்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்-விக்கி தம்பதி பெண்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

பின்னர் நயன்தாரா பேசும் போது, “அடிக்கடி நாமும் கேட்கும் வார்த்தை ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பதுதான். ஆனால் இதில் மிக அரிதான ஒரு விஷயம் என்னவென்றால் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார் என்பது தான்.

கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்

என்னுடைய வாழ்க்கையில் சினிமா தவிர நான் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் பின்னால் என் கணவர் இருக்கிறார். நான் அவரை சந்தித்த பிறகு நான் இன்னும் மிகப்பெரிய விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்றுதான் அவர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

என்றைக்குமே அவர் என்னிடம் இதை ஏன் செய்கிறீர்கள்? அதை ஏன் செய்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டதில்லை. மாறாக இதை “ஏன் செய்யாமல் இருக்கிறீர்கள்?” “ஏன் இதோடு நிற்க வேண்டும்?” என்று தான் கேட்பார். எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்” என்று பேசினார். பொதுமேடையில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை சூர்யவம்சம் படத்தில் தேவயாணி சரத்குமாரை போற்றுவது போல பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.