’பிரதர்’ படம் மட்டும் வரட்டும் அப்பறம் பாருங்க! கெத்தாக காத்திருக்கும் பிரியங்கா மோகன்!!

கன்னடத்தில் 2019ம் ஆண்டு திகில் படம் ஒன்றின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர் பிரியங்கா மோகன். இரண்டாவது படத்தில் தெலுங்கின் முன்னணி ஸ்டார் நானியுடன் சேர்ந்து ‘கேங் லீடர்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பின், அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் நாட்டில் அவருக்கு ரசிகர் கூட்டம் உருவானது. சிவகார்த்திகேயனுடன் டான் மற்றும் டாக்டர், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்திருந்தார். எதற்கும் துணிந்தவனை தவிர மற்ற படங்கள் எல்லாமே பிரியங்கா மோகனுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் பவன் கல்யாணுடனும், நானியுடனும் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்த ‘பிரதர்’ படம் இன்னும் வெளிவரமால் இருக்கிறது. அந்த படம் ரிலீஸான பின்தான் புதிய தமிழ் படங்களில் நடிக்க போவதாக கூறியிருக்கிறார். ‘பிரதர்’ படம் தனக்கு நல்ல பெயரை வாங்கி தரும். அதன் பின் தன்னுடைய மார்க்கெட் நிலவரம் உயர்ந்து விடும் என்று நம்பி வருகிறார் பிரியங்கா மோகன். ஜெயம் ரவியின் 30வது படம் ‘பிரதர்’ ஆகும். இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பின் காமெடி படங்களுக்கு பெயர் போன எம்.ராஜேஷ் இயக்குகிறார்.

priyanka mohan

‘லெஜண்ட்’ படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படம் ‘பிரதர்’. பூமிகா, நட்டி, விடிவி கணேஷ், சதீஷ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் போஸ்டர் வெளியானதும், கொரியன் சீரியல் ஒன்றின் போஸ்டரை காப்பி அடித்துள்ளனர் என்று பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இருப்பினும், படத்தின் கதை, வழக்கமான எம்.ராஜேஷின் படங்களை போல ஜாலி கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

priyanka mohan 1

ஜெயம் ரவி நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெறாத நிலையில், இந்தப்படம் நிச்சயம் நல்ல படமாக அமைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படத்தின் ஹீரோயின் பிரியங்கா மோகனும், ‘பிரதர்’ படம் தமிழ் சினிமாவில், தன்னை அடுத்த கட்டத்துக்கு கூட்டி செல்லும் என மலை போல் நம்பி இருப்பதாக தெரிகிறது. 2024ல் தான் படம் வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், படத்தின் ரிசல்டை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.