ரசிகர்களை வாயை பிளக்க வைத்த பிரியங்கா மோகன்! டிக் டாக் படத்தின் அதிரடி ட்ரைலர் இதோ!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக பிரியங்கா மோகன் வலம் வருகிறார். இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆவதற்கு முன்னதாக பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு பெரிதளவு வருமானம் இல்லை என்றாலும் நல்ல விமர்சனங்கள் கிடைக்க தொடங்கியது. அதிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்துள்ளது. பிரியங்கா மோகன் கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான ஓந்த் கதே ஹெல்லா படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அதைத்தொடர்ந்து தெலுங்கில் கேங் லீடர், ஸ்ரீ கரம் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இரண்டு மொழி படங்களில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழில் ஹீரோயின் ஆக அறிமுகமாகியுள்ளார் பிரியங்கா மோகன். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான், டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் பவ்யமான முகம் மற்றும் அழகு குடும்ப ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகையாக மாறி உள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இதை அடுத்து தமிழில் எம் ராஜேஷ் உடன் இணைந்து நடிகர் ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு மற்றும் பவன் கல்யாண் போன்ற ஹீரோக்களின் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். நடிகை பிரியங்கா மோகன் இதுவரை நடித்த படங்களில் அவரை கிளாமர் ஹீரோயின் ஆக காட்டிக் கொண்டது கிடையாது. பெரும்பாலும் குடும்ப பெண் போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிக அழகான கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியாக உள்ள டிக் டாக் படத்தின் டிரைலர் வெளியாகி அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பிரபு சுதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சுஷ்மா ராஜேந்திரா ஒரு ஹீரோயின் ஆகவும் பிரியங்கா மோகன் இன்னொரு ஹீரோயினாவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் முருகானந்தம், நமோ நாராயணன் வினோதினி, சஞ்சனா சிங், மதுசூதனன் நடித்த பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது இது ஒரு ஹாரர் திரில்லர் படம் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் சில படுக்கை அறை காட்சிகளிலும், ரொமான்டிக்கான காட்சிகளிலும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நடிகை பிரியங்கா மோகனா இப்படி நடித்துள்ளார் எனும் கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன ஒரே வார்த்தை.. சரித்திரம் படைத்த அஜித்!

மேலும் இந்த திரைப்படம் முன்னதாகவே படமாக்கப்பட்டு நீண்ட இடைவேளைக்கு பின் தற்பொழுது ரிலீஸ் செய்யப்பட உள்ளார்களா என்ற குழப்பமும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் இந்த டிக் டாக் திரைப்படம் வரும் டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews