#Breaking காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்!

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணையும்படி விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது குறித்து சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள ட்வீட்டில், பிரசாந்த் கிஷோருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழு 2024 உருவாக்கப்பட்டதாகவும், மேலும் கட்சியில் இணைய அவருக்கு விடுத்த அழைப்பை அவர் மறுத்துவிட்டாதவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், 2024 வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான திட்டத்தை முன்வைத்தார். இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வந்தன.

பிராந்த் கிஷோருடான சந்திப்பை தொடர்ந்து, அவர் அளித்த திட்டத்தை ஆய்வு செய்ய எட்டு பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்தார். மேலும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள காங்கிரஸில் அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழு 2024-ம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews