பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவா… மாஸ் அப்டேட்!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்ற பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவின் பல மொழிகளில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்கள் வெளியாகி உள்ள நிலைகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான ஆடிஷன் நடந்து வருவதாகவும், நிகழ்ச்சிகள் சில பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.

குறிப்பாக விஜய் டிவி சரத் மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோரும், தொகுப்பாளினி பாவனா மற்றும் நடிகை உமாரியாஸ் மற்றும் இரவின் நிழல் பட நடிகை ரேகா நாயர் உள்ளிட்டோ இந்த ஆடிஷனலில் கலந்து கொண்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் கோவையை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா இந்த முறை பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல் அண்மையில் கார் ஒன்றினை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

லியோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு இவ்வளவு கோடியா… செலவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா பெண்களின் ரோல் மாடலாக சமூகவலைத்தளங்களில் பலராலும் பாராட்டபட்டு வருகிறார். அவரின் அதிரடி வளர்ச்சி மற்றும் தனி திறமை காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews