நாளை பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்…. எந்தப் பொங்கல் மனதுக்கு முழுநிறைவைத் தரும்னு தெரியுமா?

தைப்பொங்கலை நாம் தமிழர் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம். நாளை (15.1.2024) விடிந்தால் நமக்குப் பொங்கல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷப்படும் திருநாள் பொங்கல். இந்த நாளை மகரசங்கராந்தி என்றும் அறுவடை திருநாளாகவும் கொண்டாடுகிறோம். ஆதித்ய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், உழவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்கூறும் உன்னத திருநாளாகவும் இந்தப் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

தைப்பொங்கலை சூரிய பொங்கல் என்றும் நல்ல நேரம் பார்த்து இடும் பொங்கல் என்றும் 2 வகையாகப் பிரிக்கலாம். சூரிய பொங்கல் என்றால் சூரியன் உதயமாகும் நேரத்தில் நைவேத்தியம் வைத்துப் படையலிட்டு வைக்கும் பொங்கல் சூரிய பொங்கல். அதன்பிறகு குடும்பத்துடன் நல்ல நேரம் பார்த்து வைக்கும் பொங்கலும் உண்டு. தை மாதம் முதல் நாளில் புதிதாகக் அறுவடை செய்து கொண்டு வரப்பட்ட அரிசி அதைப் புத்தரிசி என்பர்.

இதையும் படிங்க… சங்க இலக்கியங்கள் போற்றும் பொங்கல் பண்டிகை… எப்படி வந்ததுன்னு தெரியுமா?

அதனுடன் கரும்பு, இஞ்சி, கனி வகைகள், மஞ்சள், வாழை, தேங்காய் என்று விளைந்த பொருள்கள் அனைத்தையும் படையலில் வைப்போம். இயற்கையில் விளைந்த பொருள்களை விளைவித்த பூமி மாதாவுக்கும், அதற்குத் துணை புரிந்த சூரிய பகவானுக்கும், அந்தப் பொருள்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்து நம் கைக்குக் கொண்டு வந்து சேர்த்த உழவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் திருவிழாவாகவும் இந்தப் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

இந்த மாதம் ஒரு சிறப்பு உண்டு. அதாவது தை மாதம் அதிகாலையிலேயே பிறந்து விடுகிறது. அதனால் மாதப்பிறப்பை ஒட்டி பொங்கல் வைப்பவர்களுக்கும் சூரியப் பொங்கல் சரியான நேரமாக அமையும். சரி. இப்போது பொங்கல் வைப்பதற்கான உகந்த நேரம் பற்றி பார்க்கலாமா…

15.1.2024 திங்கள்கிழமை அன்று காலை 5.45 மணிக்கு தை மாதம் பிறக்கிறது. உத்தராயண புண்ணிய காலம் என்பது நமக்கு அப்போதே தொடங்கி விடுகிறது. சூரிய பொங்கல் வைப்பவர்கள் அன்றைய தினம் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வைக்கலாம்.

Pongal 2024
Pongal 2024

அடுத்தாற்போல் அதிகாலை 6.45 மணிக்குள் பானை வைத்து 7.30 மணிக்குள் வைத்துக் கொள்ளலாம். அல்லது காலை 9 மணிக்கு மேல் ஆரம்பித்து 10.30 மணி வரை பொங்கல் வைக்கலாம். மதியம் என்றால் 12 மணி முதல் 2 மணிக்குள் பொங்கல் இட்டு சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணலாம்.

தவிர்க்க வேண்டிய நேரம் எது என்றால், காலை 7.30 முதல் 9 மணி வரை ராகு காலம். காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம். அதனால், இந்த நேரங்களில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து விட வேண்டும்.

பொங்கல் விறகு அடுப்பில் வைப்பது தான் நல்லது. ஆதித்ய பகவான் உதயமாகும் நேரத்தில் நாம் படையல் வைத்து வழிபடுவது நமக்குள் மனது நிறைந்த சந்தோஷமாக இருக்கும்.

அவரவர் வசதிப்படி மேற்கண்ட 3 நேரத்திற்குள் வைத்துக் கொள்ளலாம். பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பதே சிறந்தது. இனிப்பாக தயாரிப்பது சர்க்கரைப் பொங்கல். பால் பொங்க வைத்து விடுவது வெண் பொங்கல். அவரவர் வசதிப்படி 2 பொங்கலையும் வைக்கலாம். அது மிகவும் சிறந்தது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.