மீண்டும் திரையில் சீமான் : உடன் நடிக்கப் போகும் உச்ச நட்சத்திரம் யார் தெரியுமா?

அனல் தெறிக்கும் வசனங்கள், பஞ்ச் டயலாக் கிடையாது, ஹீரோ மாஸ் ஓப்பனிங் கிடையாது கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரையுலகில் கெத்து காட்டியவர்தான் இயக்குநர் சீமான். இயக்குநராக வீர நடை, பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே போன்ற படங்களில் பணியாற்றி பின் அரசியல் பக்கம் திரும்பி இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளாராக தடம் பதித்து வருகிறார்.

மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம், பொறி, எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற படங்களில் நடித்த பிறகு நிரந்தரமாக அரசியல் பக்கம் திரும்பினார் சீமான். இவரது அனல் பறக்கும் பேச்சிற்கு இன்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நாட்டு நடப்புகளை, தமிழ்தேசியத்தை, அரசியல் தவறுகளை போன்றவற்றை தனது மேடைப் பேச்சுகளில் பேசி பல தொண்டர்களை தன் கட்சியின்பால் ஈர்த்து வருகிறார். எவருடனும் கூட்டணி வைக்காமல் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்து வருகிறார் சீமான்.

இந்நிலையில் சீமான் மீண்டும் திரையில் கால்பதிக்க இருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.சி என்ற படத்தில் சீமான் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் என்ற இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் அக்கா தம்பியாக நடிக்க, பிரதீப்க்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

40 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் ஒரே பாடல் : இத அடிச்சுக்க இன்னும் எந்தப் பாட்டும் வரல…

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். இதில் நயன்தாரா மற்றும் பிரதீப்-க்கு தந்தையாக சீமான் எல்.ஐ.சி படத்தில் நடித்து வருகிறார். விவசாயியாக சீமான் நடிக்கும் இப்படத்தில் தந்தை மகனுக்கிடையில் தினசரி நடக்கும் நிகழ்வுகளை கொண்டதாக படம் உருவாகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையில் கால் பதிக்கிறார் சீமான். இதனால் அவரது தம்பிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

புரட்சி வசனங்கள் பேசி, நாட்டையும், மண்ணையும் காக்கும் பணியை இயல்பாகவே சீமான் செய்து வருவதால் இப்படத்தில் அது போன்ற கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதால் சீமான் இனி தொடர்ந்து திரையிலும் கலக்குவார் என அவரது தம்பிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.