40 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் ஒரே பாடல்… இத அடிச்சுக்க இன்னும் எந்தப் பாட்டும் வரல…

ஒரே ஒரு பாடல் தான். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகம் மட்டுமல்லாமல் 80’s கிட்ஸ் முதல் 2010 கிட்ஸ் வரை இன்றும் ஆட வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன இருக்கு இந்தப் பாடல்ல? இளையராஜா-கமல்-எஸ்.பி.பி என்னும் சினிமா ஜாம்வான்கள் நடத்திய மேஜிக் இது.

2024-ம் ஆண்டு பிறந்த போது இந்தப் பாடலை ஒளிபரப்பாத தமிழ் சேனல்கள் இல்லை. ரேடியோக்கள் இல்லை. 1983-ல் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய சகலகலாவல்லவன் படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ என்ற பாடல் தான் அது. ஒவ்வொரு வருட புத்தாண்டிற்கும் இந்தப் பாடலைக் கேட்டுத்தான் கண்விழிப்பார்கள் தமிழர்கள். அந்த அளவிற்கு இந்தப் பாடல் ஒவ்வொரு தமிழனின் நாடி நரம்பெல்லாம் ஊறிப் போய் உள்ளது.

பாடலின் முதல் காட்சியில் கமல்ஹாசன் “Hey Everybody Wish You Happy New Year” என்று எஸ்.பி.பியின் குரலில் சொல்லும் போதே மனதுக்குள் மத்தாப்பு பூத்துவிடுகிறது. அதன் பின் மற்றதை இளையராஜா பார்த்துக் கொண்டார். பாடல் முழுவதும் துள்ளலிசை நடனங்கள் என கமல் இந்தப் பாடலில் வித்தை காட்டியிருப்பார்.

கதைப்படி சாதாரண கிராமத்து இளைஞன் நகரத்தில் வந்து உயர்தர ஹோட்டலில் மேற்கத்திய பாணியில் உடையணிந்து இளைஞிகளை கவரும் நாயகனகாக கமல் நடித்திருப்பார்.

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன் ஏஹே
ஹே ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம்
பாருங்கள் நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள் ஊர்
போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

இது போன்ற வரிகளை வேறு யாரால் எழுத முடியும் வாலிபக் கவிஞர் வாலியைத் தவிர..

இந்தப் பாடலின் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் கவிஞர் முதலில் வரும் Hey Everybody Wish You Happy New Year என்ற வரிகளை எழுதவில்லையாம். ஆனால் பாடு நிலா எஸ்.பி.பியோ தனக்கே உரிய பாணியில் பாடல் தொடக்கத்தில் ஹேப்பி நியூ இயர் என்ற வரிகளைச் சேர்த்துப் பாட அவ்வளவு தான். உச்சம் தொட்ட இந்தப் பாடலுக்கு இன்று வரை மாற்றுப் பாடல் வரவேயில்லை என்பது தான் உண்மை. பாடலிலும் உலக நாயகனை மிஞ்ச முடியவில்லை. அதே போல் தைப் பொங்கலுக்கும் மகாநதி படத்தில் வரும் பாரதியின் வரிகள் தான் அடையாளம். அடையாளப்படுத்தியதும் உலக நாயகன்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.