6 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான பிறந்த நாள் பலன்கள்!!

dc8e3f9c5b6a1d2477073416524bb798

6 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான பிறந்த நாள் பலன் குறித்துப் பார்க்கலாம்.

6 ஆம் தேதியில் பிறந்தவர்களின் பிறந்தநாள் பலனின்படி புதன் சந்திரன் இணைந்து உச்சபட்ச ஆதிக்கத்தினைக் கொண்டவர்களாகவே இருப்பர். இவர்களின் குணமானது அப்பாவித் தனம் நிறைந்ததாகவும், அமைதியானவராகவும் இருப்பார்கள்.

எடுத்த காரியத்தை விடாப்பிடியாய் செய்து முடிப்பதுடன் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுபவராகவும் நகைச்சுவையுணர்வு மிக்கவராகவும் இருப்பர்.

தன்னம்பிக்கை விஷயத்தில் இவர்களை அடிச்சுக்க ஆளே கிடையாது, ஆனால் எளிதில் நம்பி பிறரிடம் ஏமாந்துவிடுபவர்களாக இருப்பர். வீட்டினை அழகுபடுத்துவதில் துவங்கி, வீட்டில் உள்ளோரிடம் நட்பு பாராட்டுவது வரை சிறந்து விளங்குபவராக இருப்பவர்.

அதிர்ஷ்டம் என்ற வார்த்தை அதிக அளவில் கிடைக்காமல் போராடி வெல்லும் வாய்ப்புகளே அமைக்கப் பெற்று இருக்கும். பூர்விகச் சொத்துகளைப் பெற பலவிதமான போராட்டங்களை சந்தித்து கொண்டிருப்பவராக இருப்பீர்கள்.

ஆனால் நன்றாகச் சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்யும். மேலும் திருமண விஷயத்தில் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையச் செய்யும்.  மேலும் காதல் திருமணத்தைவிட பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

சொந்தத் தொழில் துவங்கி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையானது அதிகமாகவே இருக்கச் செய்யும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.